’தங்கத்தை தகரம்னு நினைச்சிட்டாங்க..’ இனி வாய்ப்பில்லை.. ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் கடந்துவந்த பாதை!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ஜொலித்த ஷிகர் தவான், இதற்குமேல் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்பதால் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
ஷிகர் தவான்
ஷிகர் தவான்PT
Published on

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த இடதுகை வீரர்கள் வரிசையில், “நரி கான்ட்ராக்டர், அஜித் வடேகர், சலீம் துரானி, WV ராமன், வினோத் காம்ப்ளி, சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா” முதலிய வீரர்களின் பெயர்களுடன் ஷிகர் தவானின் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

சொல்லப்போனால் இன்னொரு சவுரவ் கங்குலியாக பின்னாளில் அதிகப்படியான ரன்களை இந்தியாவிற்காக குவிக்கப்போகிறார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஷிகர் தவானின் கிரிக்கெட் பயணம் முழுமை அடையாமல் முடிவுக்கு வந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

இந்தியாவுக்காக 2010-ல் தொடங்கிய ஷிகர் தவானின் கிரிக்கெட் பயணம் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகள் முறையே 2315, 6793 மற்றும் 1579 ரன்களுடன் முடிவுக்கு வந்துள்ளது. அவர் தன்னுடைய ஐபிஎல் வாழ்க்கையில் 222 போட்டிகளில் விளையாடி 6,769 ரன்கள் குவித்துள்ளார்.

ஷிகர் தவான்
இமானே கெலிஃப் பாலின விவகாரம்| ‘உசைன் போல்ட்டை ஏன் தடைசெய்யவில்லை?’ நடிகை டாப்ஸி கேள்வி!

ஓரங்கட்டப்பட்ட ஷிகர் தவான்..

U-19 உலகக் கோப்பையில் மூன்று சதங்கள் உட்பட 505 ரன்கள் குவித்து எல்லோரையும் திரும்பிப்பார்க்கவைத்த ஷிகர் தவான், இந்தியாவுக்காக 2010-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகத்தை பெற்றார். 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் 85 பந்துகளில் அதிவேக சதமடித்தும், 187 ரன்கள் குவித்தும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் ஒரு இந்திய வீரர் பதிவுசெய்த அதிவேக சதம் மற்றும் அதிகபட்ச ஸ்கோராக அது பதிவுசெய்யப்பட்டது.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

அதற்குபிறகு இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஜொலித்த ஷிகர் தவான், இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகப்படியான ரன்களை மலைபோல் குவித்தார். பயமறியாத பேட்டிங், அழுத்தமான நேரங்களில் சவாலை எதிர்த்து விளையாடும் திறன் என ஷிகர் தவான் வெளிப்படுத்திய திறமை அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவியையும் தேடித்தந்தது.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

ஆனால் 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு ஷிகர் தவானுக்கு வாய்ப்புகள் வழங்குவதை இந்திய அணி குறைத்து கொண்டது. இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் அவர் நல்ல ஃபார்மில் இருக்கும்போதே ஓரங்கட்டப்பட்டது தான்.

இதையும் படிக்க: ஒலிம்பிக் தங்கம் வென்றவருக்கு ஜாக்பாட்: LifeTime இலவச சாப்பாடுடன் ரூ 4.5 கோடி மதிப்பிலான வீடு பரிசு!

38 வயதான அவர் இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டத்தை வங்கதேசத்திற்கு எதிராக சட்டோகிராமில் 2022 டிசம்பரில் விளையாடினார். அவரது கடைசி T20I ஜூலை 2021-ல் இலங்கையில் இருந்தது. அதேசமயம் 2018 முதல் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஷிகர் தவான் விளையாடவில்லை.

ஷிகர் தவான்
“தோனியின் வாழ்க்கையை ஒருநாள் வாழ விரும்புகிறேன்..” - யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை அளித்த NZ வீரர்!

ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்..

2023 ஆசிய விளையாட்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் கூட ஷிகர் தவானின் பெயர் இடம்பெறாத போதுதான், இந்திய அணியில் தனக்கு வழங்கப்பட்ட இடம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை ஷிகர் தவான் உணர்ந்துகொண்டார். அவர் அதற்காக எந்தவிதமான எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை, மாறாக வீரர்கள் உலகக்கோப்பையை வெல்ல பக்கபலமாக இருந்தார், எப்போதும் அனைவரிடமும் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர் தற்போது தன்னுடைய ஓய்வை ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ஒவ்வொரு கதையிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு பக்கத்தை திருப்புவது அவசியமானது. அந்தவகையில் நான் என்னுடைய சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்” என்று வீடியோவில் பேசியுள்ளார்.

இந்திய அணியில் இடம்கிடைக்காத விரக்தி குறித்து பேசியிருக்கும் அவர், "நீங்கள் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட மாட்டீர்கள் என்று வருத்தப்பட வேண்டாம், ஆனால் நீங்கள் நாட்டிற்காக விளையாடியதில் மகிழ்ச்சியாக இருங்கள் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட்ஸ், கோலியை தூக்கி சாப்பிட்ட தவான்!

ஐசிசி கோப்பை தொடர்கள் என வந்துவிட்டால் இந்தியாவின் நம்பிக்கை வீரராக ஜொலித்தவர் ஷிகர் தவான் மட்டுமே. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிரோபி இரண்டிலும் குறைந்தது 1000 ரன்களை எடுத்தவர்களில், 65.15 சராசரியுடன் உலக வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் தவான் நீடிக்கிறார். அவர் 20 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1238 ரன்கள் குவித்துள்ளார்.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

இந்தப்பட்டியலில் அவருக்கு அடுத்த இடங்களில் விராட் கோலி (64.55), சயீத் அன்வர் (63.36), விஐவி ரிச்சர்ட்ஸ் (63.31), கேன் வில்லியம்சன் (63) முதலிய சாம்பியன் வீரர்கள் உள்ளனர் என்றால் ஷிகர் தவான் ஐசிசி தொடர்களில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

2019 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த ஷிகர் தவான், கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டார். பிரைம் ஃபார்மில் ஜொலித்த ஷிகர் தவான் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் விளையாடியிருந்தால் இந்திய அணி நிச்சயம் 2019 ஒருநாள் உலகக்கோப்பையை நாட்டிற்கு கொண்டுவந்திருக்கும். ஷிகர் தவான் தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை போல் கொண்டாடப்பட்டிருப்பார். தங்கத்தை தகரம்னு நினைச்சிட்டாங்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம், எப்படியிருந்தாலும் நீங்கள் சாம்பியன் தான் ஷிகர் தவான்!

ஷிகர் தவான்
வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு! நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com