சர்பராஸ் கான்
சர்பராஸ் கான்பிசிசிஐ

“125 கோடி பேரில் ஒருவனாக இந்தியாவிற்கு ஆடவேண்டும் என்பது என் தந்தை கனவு” - எமோஷனலாக பேசிய சர்ஃபராஸ்!

பல வருட போராட்டங்களுக்கு பிறகு ஒருவழியாக இந்திய அணியின் கதவை உடைத்து அணியில் இடம்பிடித்துள்ள சர்ஃபராஸ் கான், தன்னை விட தன்னுடைய தந்தைக்காக தான் மகிழ்ச்சியடைவதாக எமோஷனலாக பேசியுள்ளார்.
Published on

ஒவ்வொரு முறை இந்தியாவின் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போதும், சர்ஃபராஸ் கானின் பெயர் அடிபடும். கடந்த 3 வருடங்களாக முதல்தர கிரிக்கெட்டில் ரன்களை வாரிகுவித்துவரும் சர்ஃபராஸ் கானுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகும். ஆனாலும் ஒவ்வொருமுறையும் சர்பராஸ்கானின் பெயர் இந்திய அணியின் பட்டியலில் இடம்பெறாமல் தவிர்க்கப்படும். சர்ஃபராஸ் கானும் தன்னுடைய வலிகளை வெளிப்படையாக தெரிவித்த போதும் கூட இந்திய அணியின் தேர்வுக்குழு தொடர்ந்து மௌனம் சாதித்தது.

தொடர் நிராகரிப்பை சகித்துக்கொள்ளாத முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூட, “உங்களுக்கு பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருப்பவர்தான் வேண்டுமென்றால் ஃபேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” என்று பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக சாடி சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்திருந்தார்.

சர்பராஸ் கான்
”நீங்கள் ஸ்லிம்மான வீரர்களை விரும்பினால் ஃபேஷன் ஷோவிற்கு செல்லுங்கள்” - கவாஸ்கர் சாடல்

அதேபோல தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் கூட, “ஒரு வீரர் கடந்த 3 வருடங்களாக 69 சராசரியுடன் ரன்களை குவித்துவருகிறார் என்றால், அது சாதாரண விசயம் கிடையாது. யாருக்காவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றால், அது முதலில் சர்ஃபராஸ் கானுக்குதான் வழங்கப்படவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் “ஒரு வீரர் இதற்கு மேல் என்ன செய்யமுடியும்” என்று ரசிகர்கள் தொடர்ந்து அவர்களுடைய ஆதரவை சர்பராஸ் கானுக்கு வழங்கிவந்தனர். இந்நிலையில் ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார் சர்ஃபராஸ் கான். இந்திய வீரர்கள் கோலி, ராகுல் இருவரும் இல்லாத சூழலில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சர்பராஸ் கான்
முடிவுக்கு வந்த சர்ஃபராஸ் கானின் காத்திருப்பு! 2வது டெஸ்ட் போட்டியில் சேர்ப்பு! ஜடேஜா, ராகுல் விலகல்
Sarfaraz Khan
Sarfaraz Khan

இந்த சூழலில்தான் இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்டது குறித்து பேசியிருக்கும் சர்ஃப்ராஸ் கான், தன்னை விட தன் தந்தைக்காக மகிழ்ச்சியடைவதாக எமோஷனலாக பேசியுள்ளார்.

“நான் இந்த நிலைமையில் இருப்பது என் அப்பாவின் உழைப்பிற்கான பலன்!”

முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய அபாரமான ஆட்டத்தால் 78 சராசரியுடன் இருந்த போது டான் பிராட்மேனுடன் கம்பேர் செய்யப்பட்ட சர்பராஸ் கான், தன்னுடைய பேட்டிங் பலன் அனைத்திற்கும் காரணம் தன் தந்தை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் சர்பராஸ் கான், “என் தந்தைதான் என்னை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தினார். முதலில் நான் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாகவே இருந்தேன், அப்போதெல்லாம் விரைவாகவே அவுட்டாகி வெளியேறிவிடுவேன். என்னால் பெரிய ஸ்கோரை அடிக்கமுடியாது. அப்போது மற்றவீரர்கள் நீண்டநேரம் ஆடுவதை பார்த்து நம்மால் அது முடியவில்லையே என வருத்தப்பட்டுள்ளேன். ஆனால் என் தந்தை கடின உழைப்பின் மீது எப்போதும் நம்பிக்கையோடு இரு எனக்கூறுவார். தற்போது நான் அடைந்துள்ள இடத்திற்கான முழுபலனும் அவருடைய கடின உழைப்பின் விளைவாகும்” என்று ஜியோ சினிமாவுடன் பேசியுள்ளார்.

Sarfaraz Khan
Sarfaraz Khan

மேலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ் முதலிய வீரர்களை பின் தொடர்கிறேன் என்று கூறிய அவர், “நான் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஜோ ரூட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜாவேத் மியாண்டட் முதலிய ஜாம்பவான்கள் விளையாடுவதை அருகிலிருந்து பார்க்கவிரும்புகிறேன். என் தந்தை நான் ஜாவேத் மியாண்டட் போலவே விளையாடுகிறேன் என என்னிடம் கூறினார். யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களை நான் பார்க்கவிரும்புகிறேன். அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள் என்பதை கற்றுக்கொண்டு, அதை ரஞ்சி டிராபியாக இருந்தாலும் சரி அல்லது எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடினாலும் சரி செயல்படுத்த விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் தந்தை குறித்து பிசிசிஐ உடனான உரையாடலில் பேசியிருக்கும் அவர், “என்னை விட, என் தந்தைக்காக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் இந்த நாளைப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். 125 கோடி பேரில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்" என்று கண்கள் கலங்கியபடி பேசியுள்ளார் சர்பராஸ் கான்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com