செய்தியாளர் சந்தானகுமார்
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பு மே 1 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக, டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அஜித் அகார்கர், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்தகைய சூழலில் உலகக்கோப்பை டி20 அணியில் இடம்பெற்ற வீரர்கள் குறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேவேளையில் மற்றொரு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல், விராட்கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சுசாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது போன்றோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் ஷிவம்துபே, உலகக்கோப்பைத் தொடரில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாற்றுவீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதேபோல், மாற்று வீரர்கள் பட்டியலில் ஷுப்மன் கில், ரியான் பராங் போன்றோரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கலீல் அகமது வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட, அவரை மாற்றுவதற்கான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையில் 4 ஓவர்களை வீசுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் கே எல் ராகுல் அணியில் இடம்பெறவில்லை என்பதும், சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கிறது.
இந்திய அணியில் சிறப்பான ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்த அக்சர் படேல் அணியில் இடம்பெறவில்லை என்பதும் அவருக்கு பதிலாக மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக ரவி பிஷ்னாய் இடம்பெற்றுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 1 ஆம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.