ரெண்டே பேரு.. இரண்டு போட்டியில் 39 விக்கெட்டுகள்! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.
சஜித் கான் - நோமன் அலி
சஜித் கான் - நோமன் அலிx
Published on

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி ப்ரூக் முச்சதமும் அடித்து அசத்த 823 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம், நஷீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி முதலிய வீரர்கள் நீக்கப்பட்டு சஜித் கான், நோமன் அலி என முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஸ்பின்னர்களும், கம்ரான் குலாம் என்ற பேட்ஸ்மேனும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

சஜித் கான் மற்றும் நோமன் அலி
சஜித் கான் மற்றும் நோமன் அலி

அறிமுகப்போட்டியிலேயே குலாம் சதமடித்து அசத்த, சஜித் கான் 9 விக்கெட்டுகள், நோமன் அலி 11 விக்கெட்டுகள் என மாற்றுவீரர்களாக வந்த 3 வீரர்களும் இங்கிலாந்தை திணறடிக்க பாகிஸ்தான் அணி 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

1-1 என தொடர் சமனாக வெற்றியை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் தொடங்கியது.

சஜித் கான் - நோமன் அலி
மீண்டும் சுழல் மாயாஜாலம்.. 10 விக்கெட்டையும் வீழ்த்திய PAK ஸ்பின்னர்கள்! 267 ரன்னுக்கு ENG ஆல்அவுட்!

பாகிஸ்தான் ஸ்பின்னர்களிடம் சுருண்ட இங்கிலாந்து..

முதல் இன்னிங்ஸ்:

முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க வீரர்கள் கிராவ்லி மற்றும் டக்கெட் இருவரும் சிறப்பாகவே தொடங்கினர், ஆனால் அதற்குபிறகு பந்துவீச வந்த சஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் அசாத்தியமான ஸ்பின் பவுலிங்கை வெளிப்படுத்தினர்.

இந்த இருவரையும் சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 267 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 89 ரன்கள், டக்கெட் 52 ரன்கள் அடித்தனர்.

இதையும் படிக்க: PAK vs ENG | 1972-க்கு பின் வரலாறு படைத்த பாக். ஸ்பின்னர்கள்; 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அபார சாதனை!

சஜித் கான்
சஜித் கான்

அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து பவுலிங் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனால் 6வது வீரராக வந்த சவுத் ஷகீல் நிலைத்து நின்று 134 ரன்கள் அடித்து அசத்த, 9வது மற்றும் 10வது வீரராக வந்த நோமன் அலி மற்றும் சஜித் கான் இருவரும் பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 45 ரன்கள், 48 ரன்கள் அடித்து மிரட்டினர். அடிபட்டு ரத்தம் வழிந்த போதும் பேட்டிங் விளையாடி முக்கியமான ரன்களை சேர்த்தார் சஜித் கான்.

இந்த இரண்டு வீரர்களின் அசாத்தியமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் 77 ரன்கள் முன்னிலை பெற்றது பாகிஸ்தான் அணி.

இதையும் படிக்க: எங்கயா பதுக்கி வச்சிருந்தீங்க| 200, 300 ரன்கள் குவித்த ரூட்-ப்ரூக் ஸ்டம்புகளை தகர்த்த PAK ஸ்பின்னர்!

சஜித் கான்
சஜித் கான்

இரண்டாவது இன்னிங்ஸ்:

77 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அந்த இரண்டு ஸ்பின் மேஜிக்கர்களின் சுழலில் சிக்கி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சீட்டுக்கட்டுகள் போல் விக்கெட்டுகள் சரிய இந்தமுறை இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

எளிதாக இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வெற்றிபெற்று அசத்தியுள்ளது பாகிஸ்தான் அணி.

கீ பவுலர்களாக திகழ்ந்த இரண்டு ஸ்பின்னர்களான சஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் சேர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் 39 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகள், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகளும், அதில் சஜித் கான் 19 விக்கெட்டுகளும், நோமன் அலி 20 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

சஜித் கான் - நோமன் அலி
'மற்ற PAK வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்..' ஜெர்சியில் வழிந்த ரத்தம்.. வெளியேறாமல் ஆடிய சஜித் கான்!

1995-க்கு பிறகு வெல்லும் பாகிஸ்தான்..

இந்த தொடரை வென்றதன் மூலம் பாகிஸ்தான் படைத்த சாதனைகள்:

* 1995-க்கு பிறகு முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றபிறகு இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்

* 2015-க்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது

* 2021-க்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது

* பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஸ்பின்னர்கள் மட்டும் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதற்கு முன் 71-ஆக இருந்தது இம்முறை தகர்க்கப்பட்டுள்ளது.

* பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் மட்டுமே இரண்டு போட்டியில் 40 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர். சஜித் கான் + நோமன் அலி இருவரும் இணைந்து 39 விக்கெட்டுகள், மற்றொரு ஸ்பின்னரான ஷாகித் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

சஜித் கான் - நோமன் அலி
ஜோ ரூட் இடமே சொல்லி எடுத்த சஜித் கான்.. 7 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை! 291-க்கு ஆல்அவுட்டான ENG!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com