ரஞ்சி அரையிறுதி: 6 விக். சாய்த்த சாய் கிஷோர்! 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரே பவுலராக அசத்தல்!

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் அசத்தியுள்ளார்.
சாய் கிஷோர்
சாய் கிஷோர்BCCI
Published on

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்திய பிரதேசம்” முதலிய 4 அணிகள் அரைறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

7 ஆண்டுகளாக அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதிபெறாத தமிழ்நாடு அணியை கேப்டன் சாய் கிஷோர் அரையிறுதிச் சுற்றுக்கு அழைத்துச்சென்றுள்ளார். அதேநேரத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையே வெல்லாத மும்பை அணி, 7 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. முதல் அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதும் நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி மும்பை பந்துவீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரின் அசத்தலான பந்துவீச்சால் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் மற்றும் வாசிங்டன் சுந்தர் இருவரால் 44, 43 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. சிறப்பாக பந்துவீசிய தேஷ்பாண்டே சாய் கிஷோர், பாபா இந்திரஜித் மற்றும் பிரதோஸ் பால் மூன்று ஸ்டார் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

சாய் கிஷோர்
36 வருசமாச்சு ரஞ்சிக்கோப்பை வென்று! அரையிறுதியில் மும்பை - தமிழ்நாடு மோதல்! யாருக்கு வாய்ப்பு?

6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய சாய் கிஷோர்!

தமிழ்நாடு அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி, சாய் கிஷோரின் அசத்தலான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 106 ரன்களை எட்டுவதற்குள்ளாகவே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அரைசதமடித்து கெத்துக்காட்டிய முஷீர் கானை வெளியேற்றிய சாய் கிஷோர், அடுத்தடுத்து வந்த ரஹானே, ஹர்திக் தமோர், அவஸ்தி, முலானி என தொடர்ச்சியாக விக்கெட் வேட்டை நடத்தினார். 34 ஓவர்கள் வீசிய சாய் கிஷோர் 8 ஓவர்கள் மெய்டனுடன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்பிசிசிஐ

இந்த 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 50 கடந்த ஒரே பந்துவீச்சாளராக மாறி அசத்தியுள்ளார். நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய் கிஷோர் 6 முறை 4 விக்கெட்டுகளும், 3 முறை 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 53 விக்கெட்டுகளை கைப்பற்றி நடப்பு ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலராக ஜொலித்து வருகிறார்.

ஷர்துல் தாக்கூரின் 109 ரன்கள் சதத்தால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்களை கடந்து விளையாடிவருகிறது மும்பை அணி.

சாய் கிஷோர்
“டேய் ஷர்துல் மாடே அடிச்சது போதும் டா”.. TN-க்கு எதிராக சதமடித்த தாக்கூர்! திட்டி பதிவிட்ட அஸ்வின்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com