“ஹெலிகாப்டர் ஷாட் தெரியாதா..?” - அக்சர் பட்டேலை கலாய்த்த ரோகித் சர்மா!

தோனியின் சிக்னேச்சர் ஷாட்டைப் பிரதிபலிக்கத் தவறியதற்காக அக்சர் படேலை ரோகித் சர்மா கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
dhoni - axar - rohit
dhoni - axar - rohitPT
Published on

2025 ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் இணைக்கப்பட்டுள்ள “அன்கேப்டு பிளேயர்” விதிமுறையின் படி, சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி தக்கவைக்கப்பட உள்ளார். அதேபோல ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு செல்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் வரவிருக்கும் 2025 ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அதில் தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா முதலிய ஸ்டார் வீரர்களின் ரோல்கள் என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.

தோனி
தோனி

இந்நிலையில் புதிய ஐபிஎல் விதிமுறை தோனிக்காகவே இணைக்கப்பட்டுள்ளது என்று தொடர்ந்து தோனியின் பெயர் ஹெட்லைனில் இருந்துவரும் நிலையில், தோனி சார்ந்து வெளியாகியிருக்கும் ரோகித் சர்மாவின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

dhoni - axar - rohit
தோனிக்கு 4 கோடி.. ருதுராஜுக்கு 18 கோடி! 2025 IPL-ல் CSK வீரர்களின் சம்பளம் என்னவாக இருக்க வாய்ப்பு?

தோனியை போல மிமிக் செய்ய தவறிய அக்சர் பட்டேல்..

இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மூன்றுபேரும் சமீபத்தில் கிரேட் இந்தியன் கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டனர். காமெடி ஷோவில் கலந்துகொண்டு மூன்றுபேரும் அடித்த லூட்டியின் ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தோனி
தோனி

கிரேட் இந்தியன் கபில் சர்மா ஷோவின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான நெட்ஃபிக்ஸ் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், கையில் எம் எஸ் தோனியின் பெயரை திருப்பி பிடித்தபடி ரோகித் சர்மா நின்றுள்ளார். எம் எஸ் தோனிபோல் மிமிக்ரி செய்யும் இடத்தில் அக்சர் பட்டேலும், அதை கண்டுபிடிக்கும் இடத்தில் ரோகித் சர்மாவும் இருக்கின்றனர்.

எம்.எஸ்.தோனி போல் மிமிக்ரி செய்த அக்சர் பட்டேல், லாங் ஆனில் தூக்கி சிக்சர் அடிப்பதுபோல் சைகை செய்கிறார். அதைப்பார்த்த ரோகித் சர்மா, “இப்படி எல்லாருமே சிக்சர் அடிப்பாங்க, வேறுமாதிரி எதாவது பண்ணு” என்று கூறுகிறார்.

அப்போது குறுக்கிட்ட சூர்யகுமார் “நான் செய்துகாட்டவா?” என்று கேட்டுவிட்டு, தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை மிமிக் செய்துகாட்டினார். அதை சரியாக கண்டுபிடித்த ரோகித் சர்மா எம்.எஸ்.தோனி என்று விடையளித்தார்.

அதற்குபிறகு அக்சர் பட்டேலை பார்த்த ரோகித் “உனக்கு ஹெலிகாப்டர் ஷாட் தெரியாதா, நீ முதல்ல ஹெலிகாப்டர் ஷாட்-தான் டிரை பண்ணிருக்கனும்” என்று கலாய்க்க... சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

dhoni - axar - rohit
உலகின் 4வது பெரிய லீக் IPL| ’தோனி என்ற தனி ஒருவருக்காகவே புதிய விதி’-MSD Retain பற்றி அஸ்வின், DK..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com