'எதற்கும் ஒரு எல்லை வேண்டும்..' CSK-ஐ விமர்சித்த ராபின் உத்தப்பா! முன்னாள் வீரர் எதிர் விமர்சனம்!

ரச்சின் ரவீந்திராவை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பேட்டிங் பிராக்டிஸ் செய்ய அனுமதித்ததற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.
உத்தப்பா - ரச்சின்
உத்தப்பா - ரச்சின்web
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி இந்திய அணி அவர்களின் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது.

அதிகம் அனுபமில்லாத வீரர்களை வைத்துக்கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று பிரிவிலும் டாமினேட் செய்தது. சிஎஸ்கே வீரர்களான ரச்சின் ரவிந்திரா மற்றும் டெவான் கான்வே இருவரும் முக்கியமான தருணத்தில் இந்தியாவிடமிருந்து போட்டியை தட்டிச்சென்றனர்.

rachin
rachin

குறிப்பாக ரச்சின் ரவிந்திரா முதல் டெஸ்ட் போட்டியில் 134 ரன்கள் குவித்திருந்தார், முதல் இன்னிங்ஸில் இந்தியா 46-க்கு ஆல் அவுட்டாகியிருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான கம்பேக் கொடுத்திருந்தது. ஒருவேளை ரச்சின் ரவிந்திரா அந்த சதமடிக்காமல் இருந்திருந்தால் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெற்றியின் அருகில் இருந்திருக்கும்.

அதேபோல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 65 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய வீரராக ரவிந்திரா செயல்பட்டார்.

rachin
rachin

இந்நிலையில் தான் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரச்சின் ரவிந்திராவை பயிற்சியில் ஈடுபட அனுமதித்த சிஎஸ்கே அணியை ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.

உத்தப்பா - ரச்சின்
“நீங்க ரன் அடித்தாலும், அடிக்காவிட்டாலும்..” கேப்டன் SKY கொடுத்த நம்பிக்கை! சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

சிஎஸ்கேவை விமர்சித்த ராபின் உத்தப்பா..

உரிமையாளராக உங்களுடைய வீரருக்கு அனைத்தையும் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் இதற்கெல்லாம் முன்னதாக உங்களுடைய நாடு முக்கியம் என ராபின் உத்தப்பா சிஎஸ்கே அணியை விமர்சித்துள்ளார்.

uthappa - rachin
uthappa - rachin

ரச்சின் ரவிந்திராவை பேட்டிங் பயிற்சி செய்ய அனுமதித்தது குறித்து பேசியிருக்கும் ராபின் உத்தப்பா, “ரச்சின் ரவிந்திரா இங்கு வந்து சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். சிஎஸ்கே ஒரு அற்புதமான அணியாக உள்ளது, அது எப்போதும் அவர்களின் வீரர்களைக் கவனித்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால் ஒரு வெளிநாட்டு வீரர் இந்திய அணியை எதிர்த்து விளையாடும்போது, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது நாட்டின் நலன் முதலில் இருக்க வேண்டும். நான் சிஎஸ்கேவை முற்றிலும் நேசிக்கிறேன், ஆனால் நாடு என்று வரும்போது, ​​​​அனைத்திற்கும் ஒரு கோடு இருக்க வேண்டும்” என்று யூ-டியூப் வீடியோவில் பேசியிருந்தார்.

ராபின் உத்தப்பாவின் கருத்து பல்வேறு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், அவரின் கருத்தை விமர்சிக்கும் வகையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் எதிர்வினையாற்றியுள்ளார்.

ராபின் உத்தப்பாவின் கருத்திற்கு எதிர்வினையாற்றியிருக்கும் வாகன், “இது ஒரு முட்டாள்தனமான கருத்து, வெளிநாட்டு வீரர்கள் அதிகமாக வார்ம்-அப் போட்டிகளில் விளையாடுவதில்லை, அதனால் அவர்களுக்கு சிறந்த தயார்படுத்தலை அனுமதிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கருத்திற்கு நிறைய எதிர்கருத்துகள் வந்திருக்கும் நிலையில், அது குறித்து ஒரு பதிவை பதிவிட்டிருக்கும் உத்தப்பா, “இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக சூப்பர் கிங்ஸ் அகாடமியில் ரச்சின் ரவிந்திரா பயிற்சி மேற்கொண்டது பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட வீடியோவை வெளியிட்டேன். உங்களில் பலர் அதில் உடன்படவில்லை என்று தோன்றியது.

உடன்படாதபோதும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரடி அமர்வில் இதைப் பற்றி மேலும் விவாதிக்க விரும்புகிறீர்களா? கமண்ட்களில் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

உத்தப்பா - ரச்சின்
“அழுத்தம் எங்களுக்கு புதிதல்ல.. பன்ட், கோலி, ரோகித் யார் இருந்தாலும்..”- கம்மின்ஸின் டாப் 5 பதில்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com