டெல்லி அணி கேப்டனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம்.. போட்டியில் விளையாட தடை!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான விதிகளை மீறிவிட்டதாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட உட்பட அணியின் ஒவ்வொரு வீரருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Rishabh Pant
Rishabh Pantpt
Published on

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும்.

அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது.

Rishabh Pant
அட்சயதிருதியைக்கு நகைக்கடைகளில் குவிந்த மக்கள்.. தூள் கிளப்பிய தங்கம் விற்பனை - இவ்வளவு கோடிகளா?

அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Rishabh Pant
பூமியை தாக்கிய காந்த புயல்.. அதிர்ச்சியூட்டும் படங்கள்! எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com