சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்web

ரோகித்தை தொடர்ந்து MI-க்கு குட்பை சொல்லும் சூர்யகுமார்? கேப்டன்சி ஆஃபர் கொடுத்த KKR! வெளியான தகவல்!

2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு வருமாறு சூர்யகுமார் யாதவுக்கு KKR அணி கேப்டன்சி பதவியை வழங்கும் ஆஃபர் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அவ்வணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்தார். இந்த நிலையில், கடந்த ஐபிஎல்லின்போது மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. அவர், கேப்டனாக நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்களே விரும்பவில்லை.

ரோகித் சர்மா
ரோகித் சர்மாweb

இதனால் தொடரின் ஆரம்பம் முதலே ரசிகர்களின் எதிர்ப்பைச் சந்தித்தார். தவிர, அந்த அணியின் வீரர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு இல்லை. ரோகித்திற்கு அடுத்த இடத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் முதலிய வீரர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதனால் அந்த அணி, கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குக்கூட முன்னேறாமல் கடைசி இடத்தைப் பிடித்தது.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மாX

இந்நிலையில் எதிர்வரும் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறுவார் என்ற தகவல் 2024 ஐபிஎல் தொடரிலிருந்தே இருந்துவருகிறது. தற்போது ரோகித்தை அணிக்குள் கொண்டுவர லக்னோ மற்றும் டெல்லி முதலிய அணிகள் போட்டிபோடுவதாக தகவல் வெளியான நிலையில், மற்றொரு மும்பை வீரரான சூர்யகுமார் யாதவும் கொல்கத்தா அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யகுமார் யாதவ்
வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு! நடந்தது என்ன?

50 கோடிவரை கொடுக்க தயாராக இருக்கும் அணிகள்!

மும்பை அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ரோகித் சர்மா அந்த அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரோகித் சர்மாவும், மும்பை அணி நிர்வாகமும் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காத நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ, டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் அவரை வாங்க தீவிரம் காட்டி வருகின்றன.

ரோகித் சர்மா
ரோகித் சர்மாஎக்ஸ் தளம்

அதிலும் டுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் 2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தின்போது எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, இரு அணிகளும் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்
இமானே கெலிஃப் பாலின விவகாரம்| ‘உசைன் போல்ட்டை ஏன் தடைசெய்யவில்லை?’ நடிகை டாப்ஸி கேள்வி!

கேப்டன்சியை வழங்க தயாராக இருக்கும் KKR!

ரோகித் சர்மா மும்பையிலிருந்து வெளியேறிவிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்பட இருக்கும் நிலையில், தற்போது மற்றொரு மும்பை இந்தியன்ஸ் வீரரான சூர்யகுமார் யாதவும் வெளியேறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியாகியிருக்கும் தகவலின் படி, 2025 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணிக்கு கொண்டுவரும் முயற்சியில் KKR அணி ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சியை வழங்கும் ஆஃபரையும் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டி20 கிரிக்கெட் வடிவத்தில் உலககிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திவரும் சூர்யகுமார் யாதவை சமீபத்தில் இந்திய அணி நிரந்தர டி20 கேப்டனாக அறிவித்தது. அதனால் சூர்யகுமாரின் மதிப்பு இந்திய கிரிக்கெட்டில் அதிகரித்துள்ளது. மும்பை அணிக்கு செல்வதற்கு முன்பு சூர்யா கொல்கத்தா அணியில் நம்பிக்கையான வீரராக இருந்த நிலையில், மீண்டும் அவரை அணிக்குள் எடுத்துவரும் முயற்சியில் கொல்கத்தா அணி இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்
IPL 2025| மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித்? ரூ.20 கோடிக்கு வாங்க தயாராகும் அணிகள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com