முடிவுக்கு வரும் விராட் கோலியின் டி20 பயணம்? பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததென்ன?

இந்திய டி20 அணியில் விராட் கோலிக்கு இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி
விராட் கோலிpt web
Published on

ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, இந்திய அணியின் இளம்படை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்குப் பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதற்கிடையே உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஹர்திக் பாண்டியா அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

@imVkohli

இந்த நிலையில், 3 வகையான போட்டிகளுக்கும் வீரர்களைத் தேர்வுசெய்யும் வகையில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு பல இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு கேப்டன் ரோகித், விராட் கோலி, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், சுப்மன் கில் உள்ளிட்ட பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் டி20 போட்டிகளில் ரோகித் மற்றும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவதும் பேசுபொருளாகி வருகிறது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்pt web

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அறிவித்த டி20 அணிகளுக்கான வீரர்கள், “சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திரா ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்” போன்றோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விராட்கோலிக்கு டி20 அணியில் இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பிசிசிஐயின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக மூத்த வீரர்களுக்கு மாற்றாக வீரர்களைக் கண்டறிய வேண்டும் என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

விராட் கோலி
விராட் கோலிpt web

கடந்த ஆண்டு நடந்த டி20 போட்டிகளுக்குப் பின் ரோகித் சர்மா, விராட்கோலி என இருவரும் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஹர்திக் காயம் காரணமாக ஓய்வில் உள்ள சூழலில் ரோகித் சர்மா அணிக்கு மீண்டும் கேப்டனாக செயல்பட வேண்டுமென கேட்கப்பட்டது. அடுத்தாண்டு வரை 20 ஓவர் போட்டியின் கேப்டனாகவும் தொடர வேண்டும் என கேட்கப்பட்டது. ரோகித் சர்மாவும் மீண்டும் அணியின் கேப்டனாக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை டி 20 -யிலும் ரோகித்தே கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல்களும் வருகின்றன.

விராட் கோலி
டி20 உலகக்கோப்பை, ஒருநாள் கோப்பை: ரோகித் - கோலியின் எதிர்காலம்..! என்ன முடிவெடுக்க போகிறது பிசிசிஐ?

அதேசமயத்தில் விராட் மீண்டும் 20 ஓவர் போட்டிக்கு வேண்டாம் எனவும் இளம் வீரர்கள் அணிக்கு வந்துள்ளதால் விராட்டுக்கான இடம் 20 ஓவர் போட்டிகளில் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை விராட்கோலியிடம் பேசி முடிவை சீக்கிரம் எடுக்க வேண்டும் என பிசிசிஐ அதிகாரிகளிடம் ரோகித் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேனாக பல ஆண்டுகாலம் விளையாடியுள்ள விராட்கோலியை அவர் ஓய்வை தெரிவிக்காமல், அவரது சம்மதம் இல்லாமல் ஒதுக்குவது சரியாக இருக்காது என்பதாலும் வரும் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடியும் உலகக்கோப்பை தொடரிலோ அல்லது டி20 தொடர்களிலோ தேர்வு செய்யப்படவில்லை என்றால் விமர்சனங்கள் எழும். இதன் காரணமாக அவரிடமே பேசி முடிவெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தான அறிவிப்புகளோ செய்திகளோ இரு தினங்க்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம்.. கபில் தேவ் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com