உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 சாதனைகளைப் படைத்த பாகிஸ்தான்!

உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் பல சாதனைகளைப் படைத்துள்ளது. தவிர, இரண்டு அணிகளும் இணைந்துகூட சில சாதனைகளைப் படைத்துள்ளன.
pak team
pak teamtwitter
Published on

உலகக்கோப்பை: பாகிஸ்தான் - இலங்கை மோதல்

இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் தள்ளியிருக்கும், 13வது ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் 8வது லீக் போட்டி நேற்று, ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக நெதர்லாந்தைப் பதம் பார்த்த பலத்துடன், பாகிஸ்தான் களமிறங்கியது. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த பரிதாப தோல்விக்கு வெற்றிகாணும் முனைப்பில் இலங்கை களம் கண்டது.

இலங்கை - பாகிஸ்தான்
இலங்கை - பாகிஸ்தான்ட்விட்டர்

இதையடுத்து, நேற்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, இறுதியில் அந்த அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்புத் தொடரில் பாகிஸ்தான் தாம் சந்தித்த 2 போட்டிகளிலும் வெற்றி கண்டு வீறுநடை போட்டு வருகிறது. தவிர, நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன், சில சாதனைகளையும் நிகழ்த்தியது.

பாகிஸ்தான் நிகழ்த்திய சாதனைகள்:

* உலகக்கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். இதற்குமுன்பு, 2011 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி சேஸிங் செய்ததே சாதனையாக இருந்தது. அந்த அணி 328 ரன்கள் எடுத்திருந்தது.

pak team
அப்துல்லா அதிரடி... ரிஸ்வான் சரவெடி.. இலங்கையை பந்தாடி உலக சாதனை படைத்த பாகிஸ்தான்!

* ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் படைத்தார். அவர், 121 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 131 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

* ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த (3 சதம்) பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்களிலும் ரிஸ்வான் 2வது இடம்பிடித்தார். இந்தப் பட்டியலில் கம்ரன் அக்மல் 5 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

முகமது ரிஸ்வான்
முகமது ரிஸ்வான்ட்விட்டர்

* உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் பட்டியலிலும் ரிஸ்வான் 2வது இடம்பிடித்தார். இம்ரான் நஸீர் 160 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர், இந்த ரன்களைக் கடந்த 2007 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக எடுத்தார்.

அறிமுக போட்டியில் பாகிஸ்தான் வீரரின் அதிகபட்ச ரன்கள்!

* உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் (176) குவித்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையிலும் அப்துல்லா சபிக் மற்றும் முகம்மது ரிஸ்வான் ஜோடி, 2வது இடம் பிடித்தனர். இந்தப் பட்டியலில் 1999-ன்போது சயீத் அன்வர் மற்றும் வாஸ்டி ஜோடி நியூசிலாந்துக்கு எதிராக 194 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது.

* உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் பட்டியலில் அப்துல்லா சபிக் முதல் இடத்தைப் பிடித்தார். அவர் நேற்றைய போட்டியின்போது 113 ரன்கள் எடுத்தார்.

அப்துல்லா சபிக்
அப்துல்லா சபிக் ட்விட்டர்

மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்

* உலகக்கோப்பையில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பட்டியலில் அப்துல்லா சபிக் 2வது இடம்பிடித்தார். அவர், இந்தச் சாதனையை 23 வயது 324 நாட்களில் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இமாம் அல் ஹக் 2019 உலகக்கோப்பையில் 23 வயது 195 நாட்களில் படைத்து முதல் இடத்தில் உள்ளார்.

* உலகக்கோப்பையில், இலங்கை அணிக்கெதிராக தோல்வியை சந்திக்காமல் அதிக வெற்றி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை 8 முறை வீழ்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா, பாகிஸ்தானை 7 முறை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணி படைத்த சாதனைகள்

* இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்கள் என 4 பேர் சதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களைக் கண்ட போட்டி என்ற சாதனையில் இணைந்துள்ளது. இலங்கையில் குசால் மெண்டிஸ் (122), சமரவிக்ரமா (108) ஆகியோரும் பாகிஸ்தானில் அப்துல்லா ஷபிக் (113), முகமது ரிஸ்வான் (131) ஆகியோரும் சதம் அடித்தனர். ஏற்கெனவே இதேபோல் 1998இல் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களும், 2013இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

* இரு அணிகளிலும் 4வது வீரர் சதம் அடிப்பது இது ஐந்தாவது முறையாகும். இலங்கை வீரர் சமர விக்ரமா 108 ரன்களும், பாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வான் 131 ரன்களும் அடித்தனர்.

சமர விக்ரமா, குசால் மெண்டிஸ்
சமர விக்ரமா, குசால் மெண்டிஸ்ட்விட்டர்

* உலகக்கோப்பை தொடரில் இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்திருந்தனர். சமர விக்ரமா மற்றும் முகம்மது ரிஸ்வான் இருவரும் விக்கெட் கீப்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்த இரண்டு பேட்டர்களும் 4வது இடத்தில் களமிறங்கி சதமடித்தனர். இந்தப் பட்டியலில் இவர்கள் இருவரும் 5வது இடத்துக்கு நுழைந்தனர்.

முன்னதாக, இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, 6 மகத்தான சாதனைகளைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதை கீழ் இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்:

pak team
உலகக்கோப்பை: ஒரே போட்டியில் இலங்கை அணி 6 சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com