அவுட்டா? நாட்அவுட்டா? சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய கேஎல்ராகுல்! முன். AUS வீரர்கள் சொன்னது என்ன?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் அவுட் வழங்கப்பட்டது சர்ச்சைக்குரியதாக மாறியது.
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்web
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 67 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து போராடி வருகிறது.

கேஎல் ராகுல்
ஸ்லெட்ஜிங், வார்த்தை மோதல், மறக்கவே முடியாத ஆட்டங்கள்.. ஆஸி. மண்ணில் ஜொலித்த 10 இந்திய வீரர்கள்!

சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய கேஎல் ராகுல்..

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்வால் மற்றும் படிக்கல் 0 ரன்னிலும், விராட் கோலி 5 ரன்னிலும் வெளியேறிய நிலையில், 74 பந்துகளை எதிர்கொண்டு நிலைத்து நின்ற கேஎல் ராகுல் சிறந்த டச்சில் விளையாடிக்கொண்டிருந்தார்.

ஆனால் 23வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் டிபன்ஸ் ஆடிய கேஎல் ராகுல் அவுட் வழங்கப்பட்டார். ஆஸ்திரேலியா அவுட் என பெரிய ஒருமித்த குரலை எழுப்பியபோதும் களநடுவர் நாட் அவுட் கொடுத்தார். ஆனால் ஆன்ஃபீல்ட் அம்பயரின் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நடுவருக்கு சென்றது.

DRS ரீப்ளேவில் பந்து பேட்டை கிராஸ் செய்யும்போது இரண்டிற்கும் இடையே இடைவெளி இருப்பது போல் தெரிந்தது. ஆனால், அதே நேரத்தில் ஸ்னிக்கோ மீட்டரிலும் எட்ஜ் தெரிய, ஒரே பக்க கோணத்தில் மட்டும் விக்கெட்டை சரிபார்த்த மூன்றாவது நடுவர் தெளிவான எவிடன்ஸ் இல்லாதபோதும் கேஎல் ராகுலுக்கு அவுட் கொடுத்து வெளியேற்றினார்.

ஆனால் போட்டியின்போது கமெண்டேட்டராக இருந்த முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹெய்டன், பந்துக்கும் பேட்டிற்கும் இடையே இடைவெளி உள்ளது, ஸ்னிக்கோவில் எட்ஜ் தெரிவது பேட்டானது லெக்-பேடில் படுவதால் ஏற்படுகிறது, இது நாட் அவுட் என்று தெரிவித்தார். அதேபோல மைக்கேல் ஹஸ்ஸியும் இது சர்ச்சைக்குரிய வகையிலான முடிவு என்று சுட்டிக்காட்டினார்.

கேஎல் ராகுல்
ஒரே நாளில் 17 Wickets.. IND-க்கு டஃப் கொடுத்து 67-க்கு 7 விக்கெட்டை இழந்த ஆஸி! சொந்த மண்ணில் சோகம்!

முன்னாள் இந்திய வீரர்கள் காட்டம்..

முன்னாள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஃபாக்ஸ் கிரிக்கெட்டில் பேசுகையில், தெளிவான எவிடன்ஸ் இல்லாதபோது ஒரு மூன்றாவது நடுவர் எப்படி களநடுவரின் முடிவை மாற்ற முடியும்” என்று கேள்வியை எழுப்பினார்.

ராபின் உத்தப்பா எக்ஸ் பதிவில், “அனைத்து கோணங்களையும் சரிபார்க்காமல் எப்படி மூன்றாவது நடுவர் முடிவெடுக்கிறார். மோசமான அம்பயரிங்” என்று காட்டாமாக தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் தன்னுடைய எக்ஸ்தள பதிவில், “மூன்றாவது நடுவர் மற்றொரு கோணத்தைக் கேட்டார், ஆனால் அது வழங்கப்படவில்லை. அவர் உறுதியாக தெரியாதபோது தான் மற்றொரு கோணத்தை கேட்டிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அப்போது அவருக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், ஏன் ஆன் பீல்ட் அம்பயரின் நாட் அவுட் அழைப்பை மாற்றினார்? தொழில்நுட்பம் மோசமாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் முறையான நெறிமுறை பின்பற்றப்படவில்லை” என்று பேசியுள்ளார்.

கேஎல் ராகுல்
”இதான் யா மேட்ச்” | 196 இன்னிங்ஸில் 2வது கோல்டன் டக்.. ஸ்மித்-ன் லெகஸியை அசைத்து பார்த்த பும்ரா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com