நியூசிலாந்து அணியின் மோசமான ஒருநாள் போட்டித் தோல்விகள்

உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக தோல்வி அடைந்ததன் மூலம் தனது ஐந்தாவது மோசமான தோல்வியை நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணிpt web
Published on

நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் முக்கியமான போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்த்து நேற்று களம்கண்டது.

நியூசிலாந்து அணி
SAvsNZ | உலகக் கோப்பை: அரையிறுதியை நெருங்கப் போவது யார்? தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பலப்பரிட்சை

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் குயின்டன் டி காக் இத்தொடரின் நான்காவது சதத்தை பதிவு செய்தார். 116 பந்துகளில் 114 ரன்களை எடுத்தார். வேண்டர் டஸ்ஸனும் அதிரடியாக ஆடி 118 பந்துகளில் 133 ரன்களைக் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை குவித்தது.

358 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி தென் ஆப்ரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் 35.3 ஓவர்களில் 167 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியின் க்ளென் ப்லிப்ஸ் மட்டும் அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார். தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மகராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வேண் டெர் டஸ்ஸன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணியை தென் ஆப்பிரிக்க அணி வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஒருநாள் போட்டியில் ரன்களின் அடிப்படையில் அந்த அணி தனது ஐந்தாவது மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

- கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 215 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

- 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக 210 ரன்கள் வித்தியாசத்திலும்,

- 2014 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 203 ரன்கள் வித்தியாசத்திலும்,

- 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 190 ரன்கள் வித்தியாசத்திலும்

தோல்வி அடைந்திருந்தது.

மறுபுறம் தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்து அணிக்கெதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெலிங்டனில் நடந்த போட்டியில் 159 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதே அந்த அணியின் சாதனையாக இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com