சேவாக்கிற்கு சிம்ம சொப்பனம்.. ரூ.1.3 கோடிக்கு RCB அணிக்காக விளையாட மறுத்த ஆஸி. வீரரின் இன்றைய நிலை?!

நாதன் ப்ராக்கன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும், 116 ஒருநாள் போட்டிகளில் 174 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
நாதன் ப்ராக்கன்
நாதன் ப்ராக்கன்pt web
Published on

நாதன் ப்ராக்கன்

ஐபிஎல் பல கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது, வளர்த்தெடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஜொலித்த நாயகர்கள் தங்களது நாட்டுக்காகவும் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளனர். அதிலும், ஐபிஎல் தொடரில் ஜொலித்த ஆஸ்திரேலிய வீரர்கள் என்றால், கண்களை மூடிக்கொண்டு பலரது பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால், ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்த வீரர்களும் அதற்கு அவர்கள் கூறிய காரணங்களும் குறிப்பிடத்தக்கவைதான். அப்படி விளையாட மறுத்த வீரர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய வீரரான நாதன் ப்ராக்கன். யார் அவர்? ஏன் விளையாட மறுத்தார்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நாதன் ப்ராக்கன். ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணிக்கான கச்சிதமான வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். ஆனால், டெஸ்ட் அணிக்கான இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான தேடலில், நாதன் ப்ராக்கனுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், சோபிக்கத் தவறியதால், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தும்படி ஆகிற்று.

நாதன் ப்ராக்கன்
“யாரோ ஒருத்தர் உளருனா நீங்களும் போய் உட்காந்துப்பீங்களா?” - ஆவேசத்துடன் செல்வராகவன் கேள்வி!

தொடர் காயங்களால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

நாதன் ப்ராக்கன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும், 116 ஒருநாள் போட்டிகளில் 174 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களில் நாதன் ப்ராக்கனும் ஒருவர். 2008 ஆம் ஆண்டில் உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராகவும் நாதன் ப்ராக்கன் மாறினார்.

இந்திய அணியின் ஜாம்பவான் சேவாக்கிற்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் விளையாடி அதில் 7 முறை சேவாக்கை வெளியேற்றியுள்ளார். சச்சின் டெண்டுல்கரையும் இரு முறை வெளியேற்றியுள்ளார். உலகின் மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராகவும் சிம்மசொப்பனமாக விளங்கியவர் நாதன் ப்ராக்கன்.

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பின் அவர் தொடர்ச்சியாக காயங்களால் அவதிபட்டது, அவரது கிரிக்கெட் வாழ்வின் சரிவிற்கான காரணமாக அமைந்துவிட்டது. காயங்களால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நாதன் ப்ராக்கன்
The GOATல் விஜயகாந்த் | “நொடிக்கு நொடி அப்பாவை அப்படி ரசித்தேன்...” - விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி

கார்ப்பரேட் வாழ்வில் நாதன் ப்ராக்கன்

2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட ரூ.1.3 கோடிக்கு நாதன் ப்ராக்கன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்த அவர், ஐபிஎல் தொடரில் விளையாடுவதையும் தவிர்த்தார். நாள் பட்ட முழங்கால் காயம் அவரை இந்த முடிவினை எடுப்பதற்குத் தள்ளியது. ஆனால், ஐபிஎல்லில் கிடைக்கும் புகழ், பணம், தொடரில் ஜொலித்தால் அதன்மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் முதலியவற்றை கருத்தில் கொண்டதால் நாதன் ப்ராக்கனின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது 47 வயதான நாதன் ப்ராக்கன் தற்போது ஃபுல்டன் ஹோகன் எனும் நிறுவனத்தில் Account Manager ஆக பணியாற்றுகிறார். தொழில்முறை கிரிக்கெட்டராக ஜொலித்த நாதன் ப்ராக்கன், தற்போது முற்றிலும் புதியதோர் கார்ப்பரேட் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். முன்னதாக 2013 மற்றும் 2017 ஆம் காலக்கட்டங்களில் தேர்தல் அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.

தற்போது இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் அகாடமி ஒன்றை நாதன் ப்ராக்கன் நடத்தி வந்தாலும், அவரது பெரும்பாலான நேரம் கார்ப்பரேட் வாழ்விலேயே கழிவதும் குறிப்பிடத்தக்கது.

நாதன் ப்ராக்கன்
“இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள்” - மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கும் அமைச்சரின் பேச்சு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com