2024 டி20 உலகக்கோப்பை: தகுதி பெற்றது நமீபியா.. மீதமுள்ள ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி!

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு நமீபியா அணி தகுதிபெற்றுள்ளது.
நமீபியா
நமீபியாட்விட்டர்
Published on

9ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு (2024) வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளன. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்ற நமீபியா அணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. தகுதிச் சுற்று அடிப்படையில் இதுவரை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய 7 அணிகள் தகுதிபெற்றுள்ளன. மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவை ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பதுங்கி பின் பாய்ச்சல்.. ருத்ரதாண்டமாடிய ருதுராஜ் கெய்க்வாட்! ஆஸி.க்கு எதிராக சதம் விளாசி சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com