”அஸ்வின்-ஜடேஜா தான் கடைசி.. இந்தியாவில் சுழற்பந்துவீச்சின் தரம் குறைந்து விட்டது” - எம்எஸ்கே பிரசாத்

இந்தியா இனி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான நட்பு நாடு அல்ல என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விமர்சித்துள்ளார்.
எம்எஸ்கே பிரசாத்
எம்எஸ்கே பிரசாத்web
Published on

பலம் வாய்ந்த உலக நாடுகளால் கூட வெல்ல முடியாத நிலையில், அதிக அனுபவம் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருப்பது மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றுக்கொடுத்துள்ளது.

அதிலும் ஸ்பின் டிராக் மைதானங்களை கொண்டிருக்கும் இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாமல் திணறியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ind vs nz
ind vs nzcricinfo

இதனையடுத்து பல முன்னாள் வீரர்கள் இப்போதிருக்கும் இந்திய வீரர்களுக்கு ஸ்பின்னர்களை எதிர்கொண்டு விளையாட தெரியவில்லை என்றும், சச்சின், டிராவிட் போனதற்கு பிறகு எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்களை விமர்சிக்கும் வகையில் பேசியிருக்கும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட்மண்ட்டை கூறியுள்ளார்.

எம்எஸ்கே பிரசாத்
”அவரொன்றும் ஹர்திக் பாண்டியா இல்லை.. ஆஸி. மண்ணில் ஜொலிக்க முடியாது!” - எம்எஸ்கே பிரசாத் கவலை!

இந்தியாவில் சுழற்பந்துவீச்சின் தரம் குறைந்து வருகிறது..

சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், “ஒவ்வொரு நாடும் தங்கள் பந்து வீச்சாளர்களுக்காக ஆடுகளத்தை தயார் செய்கின்றன. நீங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது, ​​​​பவுன்ஸ் மற்றும் பேஸ் பவுலிங்கிற்கான சலுகை உள்ளது. நியூசிலாந்து ஸ்விங்கை வழங்கும் டிராக்குகளை நம்புகிறது, இங்கிலாந்து கூட அந்த வகையான சிந்தனை செயல்முறையைக் கொண்டுள்ளது.

அந்தவகையில் இந்தியா ஸ்பின் டிராக்குகளை கொண்டிருக்கிறது. இருப்பினும், இனி இந்தியா ஸ்பின் டிராக்குகளில் நன்றாக விளையாட போவதில்லை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா இருக்க போவதில்லை. நம் பேட்டர்கள் நடுவில் பலமணி நேரம் நிலைத்து நின்று 250-300 ரன்களை எடுத்த காலம் எல்லாம் போய்விட்டது. விஷயங்கள் தாற்போது மாறிவிட்டன, நாங்கள் இனி சுழல் நட்பு நாடு அல்ல” என்று அவர் போரியா மஜும்தார் உடனான உரையாடலில் கூறியுள்ளார்.

Ashwin - Jadeja
Ashwin - JadejaPTI

மேலும் அஸ்வின் - ஜடேஜா தான் தரமான கடைசி ஸ்பின்னர்கள் என்று கூறியிருக்கும் அவர், “ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தான் கடந்த தலைமுறையின் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள், ஏனெனில் தற்போதைய தேர்வாளர்கள் மிஸ்டிரி பந்துவீச்சாளர்களையும் அல்லது பல வேரியேசன்களை கொண்ட பந்துவீச்சாளர்களைத் தான் தேடுகிறார்கள். சுழற்பந்து வீச்சின் தரம் குறைந்து வருவதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

எம்எஸ்கே பிரசாத்
294 பந்துகள் களத்தில் நின்று மிரட்டலான ஆட்டம்.. ரஞ்சிக்கோப்பையில் பேட்ஸ்மேனாக மாறிய சாஹல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com