தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்ஃபேஸ்புக்

தோனி விளாசிய சிக்ஸர்தான் RCB வெற்றிக்கு காரணமா? - தினேஷ் கார்த்திக் உடைத்த உண்மை!

தோனி அடித்த சிக்ஸர்தான் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு காரணம் என்று தினேஷ் கார்த்திக் உண்மையை உடைத்துள்ளது, தோனியின் ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதுடன், 4-வது
அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில், தோனி அடித்த சிக்ஸர்தான் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு காரணம் என்று தினேஷ் கார்த்திக் உண்மையை உடைத்துள்ளது தோனியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டூ பிளெஸ்சிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய, சென்னையின் கேப்டன்
ருத்ராஜ் ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக்
கண்ணீருடன் வெளியேறியது CSK.. தொடர்ச்சியாக 6 வெற்றி.. வரலாறு படைத்தது RCB!

பின்னர் ரச்சின் ரவீந்திரா 61 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் தோனி, ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக போராடினர். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தோனி அடித்த சிக்ஸர்தான் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு காரணம் என்று தினேஷ் கார்த்திக் உண்மையை உடைத்துள்ளது, தோனியின் ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவிக்கையில், “தோனி 110 மீட்டர் தூரத்தில் மைதானத்திற்கு வெளியே அடித்த அந்த சிக்ஸர்தான் நேற்றைய போட்டியில் சிறப்பான தருணம்; அதனால், எங்களுக்கு புதிய பந்து கிடைத்தது.சிறப்பாக பந்துவீச முடிந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கான காரணங்கள்?

சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சை சொல்லலாம். பதிரானா, முஸ்தபிசுர் ரஹ்மான் போன்றோர் இல்லாதது மைனஸ். அதேபோல், பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் ஃபார்ம் அவுட் ஆகி துபே பந்துகளை வீணடித்து ரன்களும் அடிக்காமல் ஆட்டமிழந்தது முக்கியமான காரணம்.

முக்கியமான ஆட்டத்தில் கேப்டன் ருதுராஜ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனது.. ஷர்துல் கடைசி நேரத்தில் ஹிட் அடிக்காமல் விட்டது... இவையெல்லாம் சிஎஸ்கே தோல்விக்கு காரணங்களாக அமைந்தது. முக்கியமான நேரத்தில் 67 ரன்கள் அடித்திருந்த ரச்சின் ரவீந்திரா ரன் அவுட் ஆனதும் ஒரு காரணம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com