IND vs BAN டெஸ்ட்: பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியுடன் இணைந்தார் மோர்னே மோர்கல்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மோர்னே மோர்கல் அணியுடன் இணைந்துள்ளார்.
மோர்னே மோர்கல்
மோர்னே மோர்கல்web
Published on

ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தபிறகு, புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இணைக்கப்பட்டார். கவுதம் கம்பீருக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கிய பிசிசிஐ, அவருடைய பயிற்சியாளர் குழுவை அவரே தீர்மானிக்க அனுமதி வழங்கியது.

அதன்படி இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யார் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ அணிகளில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய மோர்னோ மோர்கலை பரிந்துரைத்தார் கவுதம் கம்பீர். லட்சுமிபதி பாலாஜி, வினய் குமார் மற்றும் ஜாகீர் கான் போன்றோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், மோர்னே மோர்கலுக்கு கம்பீரின் ஆதரவு வலுவாக இருந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்திய அணியுடன் தன்னுடைய முதல் பணியாக, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் இணைந்துள்ளார்.

மோர்னே மோர்கல்
147 ஆண்டில் முதல்வீரர்.. 58 ரன்களே மீதம்.. சச்சினின் ஆல்டைம் ரெக்கார்டை உடைக்கவிருக்கும் கோலி!

இந்திய அணியுடன் இணைந்தார் மோர்கல்..

2006ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தான் ஓய்வு பெறும் நாள் வரை எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராகவே மோர்னே மோர்கல் இருந்துள்ளார். 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்களையும், 117 ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 44 டி20 போட்டிகளிலும் 47 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

morne morkel
morne morkel

தன்னுடைய உயரம் மற்றும் ஷார்ப்பான பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்த மோர்னோ மோர்கல், இந்திய அணியில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.

இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்கல், அந்த அணியில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் கவுதம் கம்பீர் அவர்மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து மோர்னோ மோர்கலின் பயணம் தொடங்கவிருக்கிறது.

மோர்னே மோர்கல்
குறைந்த விலையில் இப்படியொரு ஆஃபரா? Jio அறிமுகப்படுத்தும் 2 புதிய பட்ஜேட் ரீசார்ஜ் திட்டங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com