”அந்த 5 நிமிடங்கள் எனக்குள் ஒரு சிறந்த உணர்வு..”! பவுலிங் கோச்சான தருணம் குறித்து மோர்னே மோர்கல்!

’’போன் அழைப்பை முடித்ததும் தனியறையில் சுமார் ஐந்து நிமிடம் அமர்ந்து அந்த மகிழ்ச்சியான உணர்வை எனக்குள் பிரதிபலித்தேன்’’ - மோர்னே மோர்கல்
மோர்னே மோர்கல்
மோர்னே மோர்கல்web
Published on

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மோர்னே மோர்கல் மிகப்பெரிய இலக்கை தன்முன்னே வைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்காக 2006 முதல் 2018 வரை 12 வருடங்கள் பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்ட மோர்னே மோர்கல், அனைத்து வடிவங்களிலும் 247 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 544 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

morne morkel
morne morkel

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக புதிய இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் மோர்கல், இந்தியா போன்ற ஒரு பெரிய கிரிக்கெட் கட்டமைப்பு கொண்ட சிறந்த அணியுடன் சேர்ந்து செயல்படவிருப்பது எந்த மாதிரியான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மோர்னே மோர்கல்
147 ஆண்டில் முதல்வீரர்.. 58 ரன்களே மீதம்.. சச்சினின் ஆல்டைம் ரெக்கார்டை உடைக்கவிருக்கும் கோலி!

என் மனைவியிடம்கூட நான் செல்லவில்லை..

பிசிசிஐ ஃபோன் அழைப்பில் அழைத்து, புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டீர்கள் என்று கூறிய தருணம் எப்படி இருந்தது என்று மோர்னே மோர்கல் வெளிப்படுத்தியுள்ளார்.

உலகின் நம்பர் 1 அணிக்கு பவுலிங் கோச்சாக நியமிக்கப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து பேசிய அவர், “நான் அழைப்பை முடித்ததும், என் அறையில் சுமார் ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து அந்த மகிழ்ச்சியான உணர்வை எனக்குள் பிரதிபலித்தேன், நான் முதலில் என் அப்பாவுக்குதான் போன் செய்தேன். என் மனைவியிடம் கூட செல்லவில்லை, உங்களுக்கு தெரியும், பொதுவாக அனைவரும் முதலில் உங்கள் மனைவியிடம் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் நான் என் அப்பாவிடம் பேசினேன்.

பல ஆண்டுகளாக கிரிக்கெட்டுக்கு ஒரு ரசிகனாக இருந்து, தொடர்ந்து முழு உழைப்பையும் போட்டுவந்த ஒருவனுக்கு, பதிலுக்கு என்ன வரப்போகிறது என்பதை அறிந்த எனக்கு அது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாக இருந்தது. ஆம், நான் 5 முதல் 7 நிமிடங்கள் வரை அந்த தருணத்தை அதிகமாக ரசித்தேன்.

பின்னர் இது ஒரு வாய்ப்பு என்றும் அது சரியான நேரத்தில் நடக்கக்கூடும் என்றும் வெளிப்படையாகக் குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டேன். நாங்கள் குடும்பமாக மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், இறுதியில் விஷயங்களைக் கடந்து தற்போது இங்கே இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19-ம் தேதி சென்னை M. A சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

மோர்னே மோர்கல்
கடைசி நாள்.. இறுதி 3 நிமிடம்.. வெற்றிக்கு 1விக். தேவை.. பேட்ஸ்மேனை சூழ்ந்த 11வீரர்கள்! த்ரில் போட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com