ஆங்கிலத்தில் "Destructive" என்று சொல்லப்படும் வாக்கியத்திற்கான முழுவடிவமாக “ஆம்ப்ரோஸ், வாசிம் அக்ரம், பிரட் லீ, ஷோயப் அக்தர், டெய்ல் ஸ்டெய்ன்” முதலிய பல வேகப்பந்துவீச்சாளர்கள் வெள்ளைப்பந்து மற்றும் சிகப்பு பந்து கிரிக்கெட்டில் காலங்காலமாக ஆதிக்கம் செலுத்திஉள்ளனர். ஆனால் மிட்செல் ஸ்டார்க்கின் அறிமுகத்திற்கு பிறகு வெள்ளைப்பந்தின் “Destructive Bowler" என்ற டேக்லைனை தன்வசம் மட்டுமே வைத்து ஆதிக்கம் செலுத்திவருகிறார் ஸ்டார்க்.
பேட்ஸ்மேன் ஒருபுறம் யோசித்தால், பேட்டரின் சிந்தனையை மீறி பந்துவீச்சில் சர்ப்ரைஸ் கொடுக்கும் மிட்செல் ஸ்டார்க், யார்க்கர் பந்தில் ஸ்விங் செய்யக்கூடிய சொற்ப வீரர்களில் அவரும் ஒருவர். 2019 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியை லீக் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், ஒரு கனவு பந்தில் பென் ஸ்டோக்ஸின் ஸ்டம்பை தகர்த்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த பந்தை நம்பமுடியாத பென் ஸ்டோக்ஸ் பேட்டை தரையில் போட்டுவிட்டு தலையை ஆட்டியபடியே வெளியேறுவார். இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால் பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களில் விளையாடிக்கொண்டிருப்பார், ஒருநாள் கிரிக்கெட்டில் 114 பந்துகளை சந்தித்து களத்தில் நிற்கும் ஒருவீரரை யார்க்கரில் வெளியேற்றிய ஒரே வீரர் மிட்செல் ஸ்டார்க் மட்டும் தான்.
அதனால் தான் பெரிய பந்துவீச்சு ஃபார்மில் இல்லாத போதும் கூட, ஐபிஎல் லீக் வரலாற்றில் ரூ.24.75 கோடி என்ற அதிகப்படியான விலைக்கு சென்று எல்லோரையும் மிரட்சியில் ஆழ்த்தியுள்ளார் ஸ்டார்க். இதன்மூலம் “ஃபார்மில் இருக்கிறோனோ இல்லையோ வெள்ளைப்பந்தின் ராஜா நான் தான்” என உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்துவரும் மிட்செல் ஸ்டார்க்கின் கிரிக்கெட் பயணம் யாரும் நம்ப முடியாதது. அவர் முதலில் பந்துவீசுவதையே விரும்பாமல் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் இருந்துள்ளார். நீல் டி'கோஸ்டா என்ற கிளப் பயிற்சியாளர் தான், வெஸ்டர்ன் புறநகர் அணிக்காக 14 வயதில் விக்கெட் கீப்பராக விளையாடிக்கொண்டிருந்த மிட்செல் ஸ்டார்க்கை முதன்முதலில் கண்டுபிடித்துள்ளார்.
அதற்குபிறகு ஸ்டார்க்கை விக்கெட் கீப்பரில் இருந்து வேகப்பந்து வீச்சாளராக மாற்றுவதில் டி கோஸ்டா முக்கிய பங்கு வகித்தார். வேகப்பந்துவீச்சாளராக மாறிய பின்பு ஸ்டார்க் திரும்பிப் பார்க்கவே இல்லை. 2010ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 353 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 236 விக்கெட்டுகள் என கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளராக தன்னை நிரூபித்துக்காட்டியுள்ளார். பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ஒரு ஆல்ரவுண்டராக 7வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு வலுசேர்த்துவருகிறார் மிட்செல் ஸ்டார்க்.
* 2015 மற்றும் 2023 என இரண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளார்.
* 2015 மற்றும் 2019 இரண்டு ஒருநாள் உலகக்கோப்பைகளிலும் அதிக விக்கெட்டுகள் (22 மற்றும் 27 விக்கெட்டுகள்) வீழ்த்தியவரான அவர், 2015ம் ஆண்டு உலகக்கோப்பையின் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
* ஒருநாள் உலகக்கோப்பை மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக்கோப்பை என 3 ஐசிசி கோப்பைகளை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளார்.
* சமகால கிரிக்கெட்டர்களில் அதிக ஒருநாள் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாவது வீரராக இருந்துவருகிறார்.
* 353 டெஸ்ட் விக்கெட்டுகள், 236 ஒருநாள் விக்கெட்டுகள்
* முதல்தர கிரிக்கெட்டில் 529 விக்கெட்டுகள்
* ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (61) வீழ்த்திய 3வது வேகப்பந்துவீச்சாளராகவும், குறைவான உலகக்கோப்பை போட்டிகளில் 60 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்துள்ளார்.