சச்சின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்? டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களுடன் இருக்கும் வீரர்கள் யார்?

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் எளிதில் முறியடித்துவிடுவார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
joe root - sachin
joe root - sachinweb
Published on

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் என்று கணித்துள்ளார்.

ஜோ ரூட்
ஜோ ரூட்ட்விட்டர்

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 178 பந்துகளில் 122 ரன்களை விளாசிய ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,940 ரன்களை எட்டி இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனே (11,814) மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரைன் சந்தர்பால் (11,867) ஆகியோரை பின்னுக்கு தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது ஜோரூட்டுக்கு 32வது டெஸ்ட் சதமாக பதிவுசெய்யப்பட்டது.

joe root - sachin
ஹர்திக்கிற்கு ஏன் கேப்டன்சி இல்லை? ஜடேஜா நிலை என்ன? 2027 WC-ல் ரோகித்?- கம்பீரின் 7 முக்கிய பதில்கள்

ஜோ ரூட்டால் சச்சின் சாதனையை முறியடிக்க முடியும்..

33 வயதாகும் ஜோ ரூட் மேலும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாட முடியும் என்பதால், சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களை குவித்து முன்னிலையில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு 3,981 ரன்கள் மட்டுமே மீதமுள்ளன.

மைக்கேல் வாகன்
மைக்கேல் வாகன்

இதனை சுட்டிக்காட்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், “ஜோ ரூட் அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்தின் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறுவார். இதில் இன்னும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவெனில், அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என்பதுதான். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதத்தை தவறவிட்டார். இரண்டாவது போட்டியில் எந்த தவறும் செய்யாமல் சதத்தை எட்டினார். இனியும் அவர் முதல் போட்டியில் செய்த தவறுகளை ஒருபோதும் செய்யப் போவதில்லை" என்று தி டெலிகிராப் உடன் பேசியுள்ளார்.

joe root - sachin
அறிமுக போட்டியில் 7 விக்கெட்டுகள்.. ODI கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து பவுலர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வைத்திருக்கும் வீரர்கள்:

* சச்சின் டெண்டுல்கர் - 200 போட்டிகள் - 15921 ரன்கள் - 51 சதம் & 68 அரைசதம்

* ரிக்கி பாண்டிங் - 168 போட்டிகள் - 13378 ரன்கள் - 41 சதம் & 62 அரைசதம்

* ஜாக் காலிஸ் - 166 போட்டிகள் - 13289 ரன்கள் - 45 சதம் & 58 அரைசதம்

* ராகுல் டிராவிட் - 164 போட்டிகள் - 13288 ரன்கள் - 36 சதம் & 63 அரைசதம்

sachin
sachin

* அலைஸ்டர் குக் - 161 போட்டிகள் - 12472 ரன்கள் - 33 சதம் & 57 அரைசதம்

* குமார் சங்ககரா - 134 போட்டிகள் - 12400 ரன்கள் - 38 சதம் & 52 அரைசதம்

* பிரையன் லாரா - 131 போட்டிகள் - 11953 ரன்கள் - 34 சதம் & 48 அரைசதம்

* ஜோ ரூட் - 142 போட்டிகள் - 11940 ரன்கள் - 32 சதம் & 62 அரைசதம்

joe root - sachin
“எங்கள் உறவு TRP-க்கானது அல்ல.. இந்தியாவை பெருமைப்படுத்துவோம்!” - விராட் கோலி குறித்து கம்பீர்

அதிக டெஸ்ட் ரன்கள் வைத்திருக்கும் தற்கால வீரர்கள்:

virat kohli
virat kohli

* ஜோ ரூட் - 142 போட்டிகள் - 11940 ரன்கள் - 32 சதம் & 62 அரைசதம் - வயது 33

* ஸ்டீவ் ஸ்மித் - 109 போட்டிகள் - 9685 ரன்கள் - 32 சதம் & 41 அரைசதம் - வயது 35

* விராட் கோலி - 113 போட்டிகள் - 8848 ரன்கள் - 29 சதம் & 30 அரைசதம் - வயது 35

* கேன் வில்லியம்சன் - 100 போட்டிகள் - 8743 ரன்கள் - 32 சதம் & 34 அரைசதம் - வயது 33

joe root - sachin
தோனிக்கு மாற்றுவீரராக CSK-விற்கு செல்லும் பண்ட்? MI-ஐ விட்டு வெளியேறும் Rohit-SKY? வெளியான தகவல்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com