“உலக கிரிக்கெட்டின் புத்திசாலி அணி..” நியூசிலாந்தை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

பல உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளால் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாத நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இந்திய மண்ணில் தொடரை வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்து
நியூசிலாந்துcricinfo
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் தொடங்கி நடைபெற்றது.

நியூசிலாந்து
ரெண்டே பேரு.. இரண்டு போட்டியில் 39 விக்கெட்டுகள்! இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

2-0 என தொடரை வென்ற நியூசிலாந்து..

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று 1-1 என சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் போட்டி தொடங்கியது.

ஆனால் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி மிகமோசமான நிலையில் பின்தங்கியது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது.

santner
santner

இதன்மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்ல இந்தியாவிற்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை அமைத்தார். ஆனால் 77 ரன்னில் ஜெய்ஸ்வால் வெளியேறிய பிறகு இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

santner
santner

மிட்செல் சாண்ட்னரின் அபாரமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத இந்திய வீரர்கள் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டாகினர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒருபோட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து. இந்திய மண்ணில் இது நியூசிலாந்து பதிவுசெய்யும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

நியூசிலாந்து
டிராவிட், புஜாராவிற்கு பின் மோசமாக வெளியேறிய பண்ட்.. 5 விக். அள்ளிய சாண்ட்னர்! சாதனையை நோக்கி NZ!

உலக கிரிக்கெட்டின் புத்திசாலி அணி..

2012-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. அதற்குபிறகு 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோல்வியே தழுவாமல் விளையாடி வரும் இந்திய அணி, ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற அணிகளை கூட பலமான அடிகொடுத்து அனுப்பியது.

ஆனால் தற்போது இந்தியாவிற்கு வந்து விளையாடிவரும் நியூசிலாந்து அணி கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி கொண்டு தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது இந்தியா.

இந்நிலையில் மற்ற உலக நாடுகளால் செய்யமுடியாததை சாதித்திருக்கும் நியூசிலாந்தை பாராட்டியிருக்கும் மைக்கேல் வாகன், “உலக கிரிக்கெட்டின் புத்திசாலி அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல உள்ளது” என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து
‘வேட்டையர்கள் வேட்டையாடப்படும் நாள்’- திணறும் இந்தியா! 156க்கு ஆல் அவுட்..ஆதிக்கம் செலுத்தும் நியூசி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com