Michael Clarke & Rohit Sharma
Michael Clarke & Rohit Sharma File Image

“ஒரு போட்டியை வைத்து ரோகித் சர்மா மோசமான கேப்டன் என்று கூற முடியாது” - மைக்கேல் கிளார்க்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்திருக்கும் நிலையில் அவரை ஆதரித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார் மைக்கேல் கிளார்க்.
Published on

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கேப்டன் பொறுப்பிலிருந்து அவரை மாற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. மறுபுறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு பெரும் அழுத்தத்தில் இருந்துவரும் ரோகித் சர்மா தன்னுடைய கேப்டன் பொறுப்பை துறக்கும் முடிவிற்கு வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் உலகக் கோப்பைத் தொடர் நெருங்கி வருவதால், பிசிசிஐ எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.

Rohit Sharma
Rohit Sharma Twitter

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றிலேயே வெளியேறியது. இதனை அடுத்து 2022 டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் படுதோல்வியை தழுவி நடையை கட்டியது. தற்போது 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரை இந்திய அணி வந்தது. ஆனால் அதிலும் ரோகித் படை தோல்வியையே சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மட்டும் தான் தற்போது எஞ்சி இருக்கிறது. இதிலாவது ரோகித் சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர வேண்டும் என்று ஆதரவு அளித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள மைக்கேல் கிளார்க், “ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அதில் துளியும் சந்தேகமில்லை. அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் வீரர்களை கையாளும் விதம் நன்றாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக செயல்பட்டுள்ள அவரது ஐபிஎல் ரெக்கார்டை பாருங்கள். கேப்டன் பொறுப்பில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்று தெரியும்.

Michael Clarke & Rohit Sharma
Michael Clarke & Rohit Sharma

தொடர்ச்சியாக இருமுறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதற்கு அவரும் ஒரு காரணம். பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் அவரது அணுகுமுறை சிறப்பாகவே இருக்கிறது. ஒரேயொரு போட்டியில் தோல்வியடைந்ததால், ரோகித் சர்மா மோசமான கேப்டன் என்று சொல்ல முடியாது. முடிவு எடுப்பதற்கு முன்பாக அனைத்தையும் பார்த்த பின்னர், முடிவு செய்வது சிறந்தது. 50 ஓவர் உலகக் கோப்பை வருகிறது; அதில் கவனம் செலுத்துங்கள்” என்றுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com