ஷேன் வார்னே - குல்தீப் யாதவ்
ஷேன் வார்னே - குல்தீப் யாதவ்web

“எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல் உணர்கிறேன்..”! வார்னே குறித்து எமோசனலாக பேசிய குல்தீப்!

தனது ரோல் மாடலான ஷேன் வார்னேவின் இழப்பு, தன்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவரை இழந்ததுபோல் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.
Published on

சைனாமேன் என அழைக்கப்படும் மணிக்கட்டு பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஷேன் வார்னேவின் தீவிரமான ரசிகராவார். தன்னுடைய ஐடல் மற்றும் ரோல் மாடல் எப்போதும் ஷேன் வார்னேதான் என குல்தீப் யாதவ் பலமுறை தெரிவித்துள்ளார். அதேபோல ஷேன் வார்னேவும் குல்தீப் யாதவிடம் மிகுந்த நெருக்கத்தையும் கொண்டிருந்தார்.

Kuldeep yadav
Kuldeep yadav

2019 ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ் வீசிய ஒரே ஓவரில் மொயின் அலி 27 ரன்கள் அடித்து, அவருடைய நம்பிக்கையை தகர்த்தெறிந்தார். அதுவரை உலகின் நம்பர் 1 ஸ்பின்னராக இருந்த குல்தீப் யாதவ், அந்த 27 ரன்களுக்கு பிறகு இந்திய அணியால் கூட ஓரங்கட்டப்பட்டார். யாராலும் குல்தீப் யாதவை அவ்வளவு எளிதாக அடிக்க முடியாது என்ற எல்லோருடைய எண்ணத்தையும் மொயின் அலி உடைத்த பின்னர், குல்தீப் யாதவ் கூட தன்னால் முடியாதோ என்ற மனநிலைக்கு சென்றுவிட்டார்.

இதையும் படிக்க: “தோனியின் வாழ்க்கையை ஒருநாள் வாழ விரும்புகிறேன்..” - யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை அளித்த NZ வீரர்!

kuldeep yadav
kuldeep yadav

ஆனால் குல்தீப் யாதவ் கூட தன்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தபோது, ஷேன் வார்னே குல்தீப் யாதவ் மீது நம்பிக்கையை இழக்கவில்லை. சொல்லப்போனால் ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் முதலிய இரண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களால்தான் தற்போது இந்திய அணியில் இருக்கும் குல்தீப் யாதவ் கிடைத்துள்ளார். எல்லா அணியும் ஓரங்கட்டிய பின்னர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வந்த குல்தீப் யாதவ் தன்னுடைய திறமையை மீட்டெடுத்தார்.

ஷேன் வார்னே - குல்தீப் யாதவ்
இமானே கெலிஃப் பாலின விவகாரம்| ‘உசைன் போல்ட்டை ஏன் தடைசெய்யவில்லை?’ நடிகை டாப்ஸி கேள்வி!

ஷேன் வார்னே குறித்து எமோசனலாக பேசிய குல்தீப்!

குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இருந்துவரும் குல்தீப் யாதவ், தன் ரோல்மாடலான ஷேன் வார்னேவின் சொந்த மண்ணில் இருக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை (எம்சிஜி) பார்வையிட்டு, அங்கிருக்கும் அவருடைய சிலைக்கு முன்னதாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

kuldeep yadav
kuldeep yadav

அதற்குபிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) தலைமையகத்திற்குச் சென்று, ஆன்லைன் சிஇஓ நிக் ஹாக்லியையும் சந்தித்தார். அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் பேசியிருக்கும் குல்தீப் யாதவ், “ஷேன் வார்னேதான் என்னுடைய ரோல் மாடல், அவருடன் எனக்கு மிகவும் வலுவான தொடர்பு இருந்தது. வார்னேவை பற்றி நினைக்கும்போது நான் இன்னும் உணர்ச்சிவசப்படுகிறேன். அவருடைய இறப்பு எனது குடும்பத்தில் இருந்து ஒருவரை இழந்ததுபோல் உணர்கிறேன்" என்று எமோசனலாக பேசினார்.

இதையும் படிக்க: “உங்கள் மகனுக்கும்,சகோதரனுக்கும் கற்றுக்கொடுங்க”-பெண்களுக்கு எதிரான குற்றத்திற்காக SKY சாட்டை பதிவு!

ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து பேசியிருக்கும் அவர், “நான் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக காத்திருக்கிறேன், இந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எம்சிஜி-ல் நடைபெறவிருக்கும் பாக்ஸிங் டே போட்டியை காண இந்திய ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஷேன் வார்னே - குல்தீப் யாதவ்
1976-க்கு பிறகு முதல்முறை.. 15 வருடத்திற்கு பின் முதல்வீரர்.. PAK படைத்த சாதனை! 448 ரன்கள் குவிப்பு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com