"கோலிக்கு சிறந்த மாற்றுவீரர் புஜாரா தான்; ஏன் ஒதுக்கிறார்கள் என்று புரியவில்லை!"- முன். இந்திய வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், சட்டீஸ்வர் புஜாரா சிறப்பான ஃபாரிமில் இருந்தும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு சென்றுள்ளது இந்திய அணி.
கோலி - புஜாரா
கோலி - புஜாராICC
Published on

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருந்தவர் சட்டீஸ்வர் புஜாரா. விராட் கோலி அணியில் இருந்த போதும் கூட, மற்ற ஜாம்பவான் அணிகள் புஜாராவின் விக்கெட்டை எதிர்நோக்கும் வகையில் ஒரு ஜாம்பவான் டெஸ்ட் வீரராகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது கூட, புஜாராதான் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்.

இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சென்ற போது, “கடந்தமுறை புஜாராவை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்தமுறை அவருக்காக தனி பிளான் வைத்திருக்கிறோம்” என தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். அந்தவகையில் ஒரு திறமையான வீரராக இருந்தவரை, 2022 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணியிலிருந்து வெளியேற்றியது நிர்வாகம்.

Pujara
Pujara

காரணம் அவர் முக்கியமான WTC கோப்பைக்கான போட்டியில் 14 மற்றும் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில் புஜாராவை அணியிலிருந்து வெளியேற்றியது பிசிசிஐ. அதற்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவருடைய நீக்கலில் உறுதியாக இருந்த இந்திய அணி, அவருக்கான இடத்தில் சுப்மன் கில்லை களமிறக்கி விளையாடிவருகிறது.

கோலி - புஜாரா
‘தம்பி நான் செஞ்சுரி அடிக்கணும்’.. ‘கொஞ்ச இருங்கண்ணே..’-ஜடேஜாவை நிற்க வைத்து படம் காட்டிய சர்ஃபராஸ்!

நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 673 ரன்கள்!

இந்திய அணியின் தோல்விக்கு சட்டீஸ்வர் புஜாரா மட்டும் எப்படி பொறுப்பாவார் என பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினாலும், எடுத்த முடிவில் திடமாக இருந்துவரும் இந்திய அணி விராட் கோலி அணியில் இல்லாத போதும் புஜாராவை எடுக்காமல் இளம்வீரர்களை கொண்டு விளையாடிவருகிறது.

இந்நிலையில் நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 17வது இரட்டை சதம் விளாசியிருந்த அவர், 67 சராசரியுடன் 673 ரன்களை குவித்து சிறப்பான ஃபார்மில் விளையாடிவருகிறார். இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்திருந்த அவர், ”எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்திய அணிக்காக அனைத்தையும் செய்ய காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டது குறித்து ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் கர்சன் காவ்ரி.

pujara
pujara

புஜாரா குறித்து பேசியிருக்கும் அவர், “சட்டீஸ்வர் புஜாரா ஏன் இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்டார் என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை. கோலி இல்லாத வேளையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டும். முதலில், முதல் இரண்டு டெஸ்டில் விராட் கோலி விளையாடாத நிலையில், இப்போது மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் விராட்கோலிக்கு மிகச்சிறந்த மாற்று வீரராக மட்டுமல்லாமல், அவர்கள் சேர்த்திருக்க வேண்டிய முக்கிய வீரராகவும் புஜாரா இருந்திருக்க வேண்டும்” என்று கவ்ரி கூறியதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

pujara
pujara

மேலும் புஜாராவின் ஃபார்ம் குறித்து பேசிய அவர், "புஜாரா இன்னும் தன்னுடைய இடத்திற்காக சண்டையிடுகிறார். அவர் இன்னும் நல்ல நிலையில் பேட்டிங் செய்துவருகிறார். அவர் திரும்பி வந்தாலும், நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று கவ்ரி மேலும் கூறினார்.

கோலி - புஜாரா
ENG-க்கு பயம் காட்டிய சர்பராஸ்! ஜடேஜா செய்த தவறால் RunOut! கோவத்தில் தொப்பியை தூக்கியெறிந்த ரோகித்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com