"தோல்வியிலிருந்து பாடம் கற்பதுதான் உண்மையான வீரனுக்கு அழகு"-இந்திய அணி வீரர்களுக்கு கபில்தேவ் ஆறுதல்

”தோல்வியில் இருந்து பாடம் கற்பதுதான் உண்மையான விளையாட்டு வீரனுக்கு அழகு” என இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, கபில் தேவ்
இந்திய அணி, கபில் தேவ்ட்விட்டர்
Published on

நடப்பு உலகக்கோப்பையை, இந்தியா தவறவிட்டதே, அனைவரின் பேச்சாக இருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தோல்வி குறித்து முன்னாள் கேப்டனும் இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்தவருமான கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

கபில் தேவ்
கபில் தேவ்

இதுகுறித்து அவர், “விளையாட்டில் இதையெல்லாம் கடந்து சென்றாகத்தான் வேண்டும். இந்த வலியை, வாழ்க்கை முழுவதும் சுமக்க முடியாது. ஆனால், இவையனைத்தும் ரசிகர்களைப் பொறுத்ததுதான். விளையாட்டைப் பொறுத்தவரை அடுத்தடுத்த நாளுக்கான திட்டத்தை வகுக்க வேண்டும். நடந்து முடிந்ததை யாராலும் மாற்ற முடியாது. தொடர்ந்து கடினமாக முயற்சி செய்வதே விளையாட்டு வீரர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ஆனால், இறுதிப்போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. தோல்வியில் இருந்து பாடம் கற்பதுதான் உண்மையான விளையாட்டு வீரனுக்கு அழகு” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு கபில் தேவ் அழைக்கப்படவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”2 ஓவர்களில் ஆட்டத்தையே மாத்திடுவாங்க”-ஆஸி. குறித்து இந்திய அணிக்கு முன்பே எச்சரித்த பாக். வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com