’பாகிஸ்தான் வளமாகவே இருக்கும்..’ - இந்தியா விளையாட மறுப்பதை JOKE என்று குறிப்பிட்ட முன்.PAK கேப்டன்!

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க வரமாட்டோம் என இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ind vs pak
ind vs pakpt
Published on

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் உள்விவகாரங்கள் மற்றும் இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றமான சூழல் காரணமாக, 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்துவருகிறது.

அதேசமயத்தில், இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்கள் கடைசியாக டிசம்பர் 2012ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2013 வரை இந்தியாவில் நடைபெற்றது. அதன்பிறகு அவர்களுக்கு இடையே இருதரப்புத் தொடர்கள் கூட விளையாடப்படவில்லை. ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் பொதுவான நாடுகளில் விளையாடி வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இத்தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது.

இத்தொடரில் விளையாட ஆரம்பம் முதலே இந்தியா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி செல்வது சாத்தியமில்லை என உறுதியாகி உள்ள பட்சத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

இந்நிலையில் இந்திய அணி நிர்வாகத்தின் மறுப்பு குறித்து பல பாகிஸ்தான் வீரர்கள் கருத்துதெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்களான ஜாவேத் மியான்டட் இந்தியா விளையாட வரமறுப்பதை ஜோக் என விமர்சித்துள்ளார்.

ind vs pak
ICC சாம்பின்ஸ் டிராபி | இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா? சிகப்பு கொடி காட்டியது பிசிசிஐ!

ஐசிசி எப்படி வருமானம் ஈட்டும் என்பதை பார்க்க விரும்புகிறேன்..

பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மறுத்திருக்கும் இந்திய அணியின் முடிவு குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட், “இப்படி நடப்பது எல்லாம் ஒரு நகைச்சுவை போலவே இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் விளையாடாவிட்டாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் உயிர்வாழ்வது மட்டுமல்லாமல், கடந்த காலத்தில் நாம் காட்டியதைப் போலவே செழிப்பாகவே இருக்கும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா போட்டிகள் நடைபெறாத போது ஐசிசி நிகழ்வுகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று விமர்சித்திருப்பதாக பிடிஐ மேற்கோள் காட்டியுள்ளது.

ஜாவேத் மியான்டட்
ஜாவேத் மியான்டட்

அதேபோல இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் இன்சமாம் உல் ஹக், “அவர்கள் இவ்வளவு பெரிய நிகழ்வில் நடக்கும் கிரிக்கெட்டை இழக்கிறார்கள். பாகிஸ்தானில் இந்திய அணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. உண்மையில், அவர்கள் இங்கு சிறந்த விருந்தோம்பலை தான் பெறுவார்கள்” என்று பேசியுள்ளார்.

inzamam ul haq
inzamam ul haqicc

அதேபோல பாகிஸ்தானின் மற்றொரு முன்னாள் கேப்டனான ரஷித் லத்தீப், இந்தியாவின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார். அவர் பேசும்போது, "போதும் போதும். அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் எந்த பிரச்சனையும் இல்லாமல் விளையாடும் போது, ​​இந்தியாவின் இந்த முடிவு முற்றிலும் அரசியல் சார்ந்தது, இது கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.

ind vs pak
‘இருங்க பாய்..’ - வேகப்பந்தில் மிரட்டிய PAK.. 22 ஆண்டுக்கு பின் AUS மண்ணில் தொடரை கைப்பற்றி வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com