”சிறுவயதில் இருந்தே விராட் கோலி அப்படித்தான்..” - இஷாந்த் சர்மா சொன்ன உருக்கமான சம்பவம்!

விராட் கோலி உடனான சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து கிரிக்கெட் வீரரும், அவருடைய நெருங்கிய நண்பருமான இஷாந்த் சர்மா பதிலளித்துள்ளார்.
விராட்கோலி, இஷாந்த் சர்மா
விராட்கோலி, இஷாந்த் சர்மாtwitter
Published on

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள அந்தப் பேட்டியை விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், “விராட் கோலியின் டிக்ஸனரியில் நடக்கும் என்ற வார்த்தையே கிடையாது. அவர் நடத்திக் காட்டுவோம் என்று சொல்வார். சிறுவயதில் இருந்தே விராட்கோலி அப்படித்தான்.

இஷாந்த் சர்மா
இஷாந்த் சர்மாtwitter

17 வயதில் டெல்லி அணிக்காக ஆடியபோது, திடீரென அவரின் தந்தை மறைந்துவிட்டதாக எங்களுக்கு தெரிய வந்தது. அவர் அப்போது சோகமாகவும், தனியாகவும் அமர்ந்திருந்தார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த நிலையிலும் அவர், மைதானத்திற்குள் களமிறங்கி பேட்டிங் செய்து, ஆட்டத்தையும் வென்று கொடுத்தார். எனக்கு இதுவரை அந்த விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை எனக்கு அதுபோல் நிகழ்ந்திருந்தால், மைதானத்திற்கே வந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். அங்கிருந்து விராட் கோலி மிகச்சிறந்த கேப்டனாக உருவெடுத்தார்.

மேலும் ஃபிட்னஸ் கலாசாரத்தை இந்திய அணிக்குள் கொண்டுவந்ததே விராட் கோலிதான். கேப்டனாகப் பதவியேற்றபின் விராட் கோலி தலைமையின்கீழ் பவுலர்கள் சிறப்பாக முன்னேறினார்கள். அதேபோல், விராட் கோலி வாழ்க்கையின் அனைத்துச் சூழல்களிலும் நான் நெருங்கி இருந்து பார்த்திருக்கிறேன்.

Virat kohli
Virat kohliTwitter

அவரின் வாழ்க்கையில் அனுஷ்கா சர்மாதான் அமைதியைக் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது பலரும் ஆன்மிகம் பற்றி பேசி வருகிறோம். அந்த வகையில், விராட் கோலியும் கோயில்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com