”ரூட் ஆடியது முட்டாள்தனமான ஷாட்”! விளாசும் UK ஊடகங்கள்! பாஸ்பாலால் நல்ல வீரரை இழக்கிறதா இங்கிலாந்து?

இங்கிலாந்து கிரிக்கெட்டில் ”பாஸ்பால்” ஆட்டம் அறிமுகமான பிறகு ஒரு கிளாசிக்கல் கிரிக்கெட் வீரராக இருந்த ஜோ ரூட், அடுத்து ஆடும் முயற்சியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
Joe Root
Joe RootCricinfo
Published on

தற்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் முதலிய வீரர்களின் பெயர்களுக்கு போட்டியாக ஜோ ரூட் என்ற பெயர்தான் முதலில் வந்து நிற்கும். அப்படி ஒரு பாரம்பரியத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் வைத்திருந்த ஜோ ரூட்டை தான் தற்போது “இங்கிலாந்து ஊடகங்கள்” மோசமாக விமர்சித்து வருகின்றன.

138 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49 சராசரியுடன் 11ஆயிரம் ரன்களை குவித்திருக்கும் ஜோ ரூட், 5 முறை இரட்டை சதங்களையும், 30 முறை சதங்கள் மற்றும் 60 அரைசதங்களையும் பதிவுசெய்து தன்னை ஒரு ஜாம்பவான் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நிலைநிறுத்தியுள்ளார். இப்படி காலத்திற்கும் தலைசிறந்த வீரராக இருப்பார் என்ற பெயரை பெற்ற ரூட், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ”பாஸ்பால்” ஆட்டம் அறிமுகமான பிறகு அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி வருகிறார்.

Joe Root
அவசரமாக சென்னை திரும்பிய அஸ்வின்! 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து திடீர் விலகல்!

முட்டாள்தனமான ஷாட்! விமர்சித்த இங்கிலாந்து ஊடகங்கள்!

இந்தியாவிற்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்த போதும் அடித்து ஆட முயற்சித்து சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் தூணாக செயல்பட்டுவந்த ஜோ ரூட், பாஸ்பால் ஆட்டத்தால் இந்த தொடரில் ’29 & 2 ரன்கள், 5 & 16 ரன்கள், 16 ரன்கள்’ முதலிய ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ஜோ ரூட்டின் இத்தகைய ஆட்டத்தை விமர்சித்திருக்கும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “ஜோ ரூட் அடித்த ரன்களை விட அவர் வீசிய ஓவர்களின் எண்ணிக்கை (89) அதிகம்” என விமர்சித்துள்ளார்.

Joe Root
Joe Root

இந்நிலையில்தான் இன்றைய போட்டியில் ஜோ ரூட் ஆடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. இன்றைய போட்டியில் இங்கிலாந்து எப்படியும் 400 ரன்களுக்கு மேல் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 224 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளுடன் நல்ல நிலையில் இருந்த போது, தேவையில்லாமல் பும்ராவிற்கு எதிராக ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரூட். ரூட்டை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவும் 0 ரன்னில் நடையை கட்ட நல்ல நிலைமையில் இருந்த இங்கிலாந்து சொதப்ப ஆரம்பித்தது. பின்னர் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜோ ரூட்
ஜோ ரூட்

ஜோ ரூட்டின் மோசமான ஷாட்டை ”டெஸ்ட் வரலாற்றில் மிகவும் முட்டாள்தனமான ஷாட்” என டெலிகிராப், ”அருவருக்கத்தக்க மற்றும் தேவையற்ற ஷாட்” என பிபிசி, ”ரூட்டின் இந்த மோசமான ஆட்டம், அவரை சிறந்த வீரர் என்ற நிலையிலிருந்து கீழே தள்ளியுள்ளது” என தி கிரிக்கெட்டர் முதலிய இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் மட்டும் ரூட் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று ஆதரவளித்துள்ளார்.

Joe Root
7 டெஸ்ட்டில் ”2 சதம், ஒரு இரட்டை சதம், 3 அரைசதம்”! சேவாக்கின் சாதனையை சமன்செய்த ஜெய்ஸ்வால்!

பாஸ்பாலால் நல்ல டெஸ்ட் வீரரை இங்கிலாந்து இழக்கிறதா?

பாஸ்பால் அணுகுமுறை ஆட்டத்தால் தான் ஜோ ரூட் இப்படி மோசமாக செயல்படுகிறாரா என்று கேட்டால் ஆமாம் என்று தான் சொல்லவேண்டும். பொதுவாக இதைப்போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஃபிளாட் ஆடுகளங்களில், ஜோ ரூட் இரட்டை சதமே அடிக்கக்கூடிய வீரர். மதியத்திற்கு மேல் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் சூழலில் இப்படியொரு ஷாட் ஆடிவெளியேறுகிறார் என்றால் இதற்கு முழுக்க ”பாஸ்பால்” அணுகுமுறை மட்டுமே காரணமாக அமைந்துள்ளது.

joe root
joe root

ஒரு அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுமே பாஸ்பால் ஆட்டம் ஆடவேண்டுமா என்ன?, உங்கள் அணியில் 5, 6 பேர் பாஸ்பால் ஆட்டத்தை ஆடுவதற்காக ஒரு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேனை இப்படி மாற்றிவைப்பது சரிதானா என்ற கேள்வியை இங்கிலாந்து நிர்வாகம் தங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள வேண்டும்.

joe root
joe root

டெஸ்ட் கிரிக்கெட்டில் சக போட்டியாளராக இருக்கும் கேன் வில்லியம்சன் 7 ஆட்டங்களில் 7 சதங்கள் என உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜோ ரூட் போன்ற ஒரு அசாத்திய வீரர் இப்படியான விமர்சனங்களை சந்திப்பது ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் ஆதங்கத்தையும் எழுப்புகிறது. எப்படியோ மீண்டும் எழுந்துவாருங்கள் ஜோ ரூட்!

Joe Root
’யார் சாமி நீ’! உலகத்தில் ஒரேயொரு பேட்ஸ்மேனாக பேர்ஸ்டோ படைத்த மோசமான சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com