ஐபிஎல் 2025 | தோனி To ரோகித்சர்மா.. 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்? யார்? - முழுவிபரம்

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்வதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
virat, rohit, sanju, dhoni
virat, rohit, sanju, dhonipt web
Published on

ஐபிஎல் 2025

இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுவது, ஐபிஎல் தொடர். கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடத்தப்படும் இந்தத் தொடரின் அடுத்த சீசன் (18ஆவது சீசன்) 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. எனினும், இதுகுறித்த பேச்சுகள் இப்போதே சூடுபிடித்துள்ளன. அதற்குக் காரணம், விரைவில் ஐபிஎல் அணிக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறைகள், ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

2025 ஐபிஎல் ஏலத்திற்கான தக்கவைப்பு விதிமுறைகளின் படி ஒரு அணி 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம், 6 வீரர்களுக்கான RTM-ம் (ஏலத்தின் போது) பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் இந்த ஏலத்தில் அணிகளின் பயன்பாட்டு தொகை 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

virat, rohit, sanju, dhoni
சிஎஸ்கே படையில் மீண்டும் தோனி.. தக்கவைக்கப்பட்ட மற்ற வீரர்கள் யார்? எவ்வளவு தொகை?

மீண்டும் தோனி.. 

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பிப்பதற்கு இன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பித்துள்ளது.

தோனி
தோனிX

இந்நிலையில்தான், தோனி 4 கோடி ரூபாய்க்கு அன்கேப்ட் வீரராக சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடிக்கும், ஜடேஜா 18 கோடிக்கும், மதீஷா பதிரானா 13 கோடிக்கும், துபே 12 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் 21 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். அடுத்து ரவி பிஷ்னோய் மற்றும் மயங்க் யாதவ் 11 கோடிகளுக்கும், மோஷின் கான் 4 கோடிக்கும், ஆயுஸ் பதோனி 4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

virat, rohit, sanju, dhoni
”இன்னிங்ஸ் + 273 ரன்கள்” - டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த தென்னாப்ரிக்கா!

இந்திய வீரர்களில் அதிக தொகையுடன் விராட்

கேகேஆர் அணியில் ரிங்கு சிங் 13 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் ரஸல் 12 கோடிகளுக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் 4 கோடிகளுக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், அக்சர் படேல் 16.5 கோடி ரூபாய்க்கும், குல்தீப் யாதவ் 13.25 கோடி ரூபாய்க்கும், ஸ்டப்ஸ் 10 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் போரெல் 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிக தொகையுடன் விராட் கோலி முதலிடம்!
அதிக தொகையுடன் விராட் கோலி முதலிடம்!

பெங்களூரு அணியில், விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். ரஜத் படிதார் 11 கோடி ரூபாய்க்கும், யஷ் தயால் 5 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

மும்பை அணியில் நீடிக்கிறார் ரோஹித்
மும்பை அணியில் நீடிக்கிறார் ரோஹித்

மும்பை இந்தியன்ஸ் அணியில், பும்ரா 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா 16.35 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா 16.30 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். திலக் வர்மா 8 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

virat, rohit, sanju, dhoni
தீபாவளி பண்டிகை நாள் | இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை என்ன? 17 நாட்களில் இவ்வளவு உயர்வா?

க்ளாசன் சாதனை

ரூ.23 கோடி - க்ளாசன் சாதனை!
ரூ.23 கோடி - க்ளாசன் சாதனை!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில், பேட் கம்மின்ஸ் 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட் 14 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளனர். நிதிஷ் ரெட்டி 6 கோடி ரூபாய்க்கும், க்ளாசன் 23 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்x

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். ரியான் பராங் மற்றும் துருவ் ஜூரல் 14 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஷிம்ரன் ஹெட்மயர் 11 கோடி ரூபாய்க்கும், சந்தீப் சர்மா 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சஷாங்க் சிங் 5.5 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டு உள்ளார். ப்ரப்சிம்ரன் சிங் 4 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

GT | சுப்மன் கில் | குஜராத் டைட்டன்ஸ்
GT | சுப்மன் கில் | குஜராத் டைட்டன்ஸ்file image

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான் 18 கோடிகளுக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் 16.5 கோடி ரூபாய்க்கும், சாய் சுதர்சன் 8.5 கோடி ரூபாய்க்கும், ஷாருக்கான் மற்றும் ராகுல் தெவாட்டியா 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

virat, rohit, sanju, dhoni
கும்பகோணம் | மது போதையில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com