Asia Cup Final: 6 விக்கெட்டுகள் தூக்கி இலங்கையை சுருட்டிய சிராஜ்! இந்திய அணிக்கு 51 ரன்கள் இலக்கு!

ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 51 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.
Ind vs Sl
Ind vs SlTwitter
Published on

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட 2023 ஆசியக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரண்டு சிறந்த ஆசிய அணிகளில் எந்த அணி கோப்பையை தூக்கப்போகிறது என முடிவு செய்யும் பைனல் போட்டியானது, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது.

6 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ்!

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா இந்திய அணியை பந்துவீசுமாறு அழைத்தார். மழையின் இடையூறு காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில் இலங்கை வீரர்கள் பதும் நிஷாங்கா மற்றும் குசால் பெரேரா இருவரும் பேட்டிங்கை தொடங்கினர். நல்ல தொடக்கத்தை கொடுத்து இந்தியாவிற்கு டஃப் கொடுக்கும் முயற்சியில் களமிங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே அவுட் ஸ்விங் டெலிவரியில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் குசால் பெரேரா.

Ind vs Sl
Ind vs Sl

1 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து தடுமாறிய இலங்கை அணியை எழவே விடாமல் தலைகீழாக திருப்பி போட்டார் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். போட்டியின் 4வது ஓவரை வீச வந்தார் சிராஜ். அந்த ஓவரின் முதல் பந்தை கவர் திசையில் காற்றில் அடித்த ஓப்பனர் நிஷாங்கா, ஜடேஜா கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த சமரவிக்ரமாவை நிக்கவே விடாமல் LBW-ல் வெளியேற்ற, அதற்கு பிறகு வந்த அசலங்கா மற்றும் தனன்ஜெயா இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியாமல் தொடர்ச்சியாக வெளியேறினர்.

Ind vs Sl
ஆசிய கோப்பை வரலாற்றில் சிறந்த 5 போட்டிகள்! இந்த சம்பவங்களை எல்லாம் எப்போதும் மறக்க முடியாது!
Siraj
Siraj

ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சிராஜ் இந்திய அணிக்கு ஒரு அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அத்துடன் நிறுத்தாத சிராஜ் அடுத்த ஒவரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவை போல்ட்டாக்கி வெளியேற்ற 12 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.

8வது ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவிற்கு 51 ரன்கள் இலக்கு!

பின்னர் 7வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த குசால் மெண்டிஸ் மற்றும் வெல்லேலகே இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்தனர். இந்த ஜோடி 21 ரன்கள் சேர்க்க மீண்டும் பந்துவீச வந்த சிராஜ் தொடர் முழுவதும் சிறப்பான ஃபார்மில் இருந்து வந்த குசால் மெண்டிஸை போல்டாக்கி வெளியேற்றினார். தொடர்ந்து பந்துவீச வந்த ஹர்திக் பாண்டியா சிராஜ் விட்ட இடத்திலிருந்து விக்கெட்டுகளை வீழ்த்த, 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 50 ரன்களை மட்டுமே எடுத்தது.

Ind vs Sl
ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அள்ளிய முகமது சிராஜ்! 12 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி!
ind vs sl
ind vs sl

பந்துவீச்சை பொறுத்தவரையில் சிராஜ் 6 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 8வது ஆசியக்கோப்பையை வெல்ல 51 ரன்கள் மட்டுமே மீதம் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com