ரோகித், கோலி, ஷமி... கோப்பையைப் பறிகொடுத்தாலும் சாதனையில் முதலிடம் பிடித்த இந்தியர்கள்!

இந்தியா உலகக்கோப்பையை இழந்திருந்தாலும், இந்த தொடரில் நமது வீரர்களே ஒருசில சாதனைகள் படைத்ததில் முதலிடத்தில் உள்ளனர்.
rohit, kohli, shami
rohit, kohli, shamitwitter
Published on

2023 உலகக்கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணியை வதம் செய்து, 6வது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) உலகக் கோப்பையைக் கைப்பற்றி, வரலாற்றை மாற்றி எழுதியது. முன்னதாக, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், கே.எல்.ராகுலும் 66 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அவ்வணியில் டிராவிஸ் ஹெட் 137 ரன்களும், லபுசேன் 58* ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க: WC2023: 6வது முறையாக சாம்பியன்.. வரலாற்றை மாற்றி எழுதிய ஆஸ்திரேலியா! இந்தியாவின் போராட்டம் வீண்!

இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், இந்த தொடரில் சிறப்பாகவே விளையாடி, ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்து வந்தது. அதன்மூலம் இந்திய வீரர்கள்தான் நடப்புத் தொடரில் பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளனர்.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர், 3 சதம், 6 அரைசதங்களுடன் 765 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, ஓர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களிலும் இவரே முதலிடத்தில் உள்ளார். மேலும், இந்த தொடரில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் விராட் கோலியே முதல் இடத்தில் உள்ளார். அவர் 68 பவுண்டரிகள் அடித்துள்ளார். ரோகித் 66 பவுண்டரிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: 2014 டூ 2023: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியும் இந்திய அணி தவறவிட்ட 9 ஐசிசி கோப்பைகள்!

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் 2வது இடத்தில் இந்திய வீரரே இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 1 சதம், 3 அரைசதங்களுடன் 597 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித்தே முதலிடத்தில் உள்ளார். அவர் 31 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையிலும் இந்திய வீரரே இடம்பிடித்துள்ளார். முகம்மது ஷமி 24 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: WC Final: அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்து கோலியைக் கட்டிப்பிடித்த பாலஸ்தீன ஆதரவாளர்! யார் அவர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com