போட்டிகள் - 7
ரன்கள் - 360
பேட்டிங் சராசரி - 60.00
விக்கெட்டுகள் - 7
பௌலிங் சராசரி - 26.57
பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலுமே இந்தத் தொடரில் அசத்தினார் முஷீத் கான். நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்து இந்தியாவுகு நம்பிக்கையாக விளங்கினார். நியூசிலாந்துக்கு எதிராகவும், அயர்லாந்துக்கு எதிராகவும் அசத்தலாக விளையாடி சதம் அடித்தார். அதுமட்டுமல்லாமல் தன் இடது கை ஸ்பின் மூலம் தேவையான நேரங்களில் விக்கெட்டுகள் வீழ்த்தியும் கைகொடுத்தார்.
போட்டிகள் - 7
ரன்கள் - 397
பேட்டிங் சராசரி - 56.71
விக்கெட்டுகள் - 1
இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் முன்னின்று இந்திய அணியை வழிநடத்தினார். இந்தத் தொடரின் டாப் ரன் ஸ்கோரராகத் திகழ்ந்த அவர் 1 சதமும், 3 அரைசதங்களும் விளாசினார். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் அசாதரணமானது. இந்திய அணி 244 ரன்களை சேஸ் செய்தபோது 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்தாலும் கடைசி வரை போராடிய அவர், இந்தியா வெற்றி பெறுவதற்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கினார். மிகவும் நிதானமாக ஆடி இத்தொடர் முழுவதுமே இந்திய பேட்டிங்கின் நம்பிக்கையாக திகழ்ந்தார் உதய்.
போட்டிகள் - 7
விக்கெட்டுகள் - 18
பௌலிங் சராசரி - 10.27
எகானமி - 2.68
இந்த அண்டர் 19 உலகக் கோப்பையீன் இரண்டாவது டாப் விக்கெட் டேக்கர் சௌமி பாண்டே. ஏழே போட்டிகளில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய அவர், 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அனைத்து போட்டிகளிலுமே விக்கெட் வீழ்த்திய அவர், மிடில் ஓவர்களில் மட்டுமல்லாமல் பவர்பிளேவிலும் நல்ல தாக்கம் ஏற்படுத்தினார். இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் இடது கை ஸ்பின்னர்கள் வரிசையில் இவரும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
போட்டிகள் - 6
விக்கெட்டுகள் - 11
பௌலிங் சராசரி - 16.54
எகானமி - 3.87
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆயுதமாய் உருவெடுத்தார் ராஜ் லிம்பானி. ஆரம்பத்தில் நிதானமாகவே தொடங்கிய அவர், அரையிறுதியிலும் ஃபைனலிலும் விஸ்வரூபம் எடுத்தார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்தப் போட்டிகளில் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவர். பவர்பிளேவில் தன் அசத்தல் வேகத்தாலும், ஸ்விங்காலும் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாய் விளங்கினார் அவர். 4கும் குறைவான எகானமியில் 16.54 என்ற சராசரியில் நல்லதொரு தொடரைக் கொடுத்திருக்கிறார் லிம்பானி.
போட்டிகள் - 7
ரன்கள் - 303
பேட்டிங் சராசரி - 60.6
60 என்ற சராசரி சிறப்பாக இருக்கிறது என்று யோசித்தால், சச்சின் தாஸின் 116.53 என்ற ஸ்டிரைக் ரேட் மலைப்பாக இருக்கும். ஒரு 50 ஓவர் போட்டித் தொடரில் அவ்வளவு அசத்தலாக விளையாடியிருக்கிறார் அவர். அனைத்தையும் விட, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் ஆடிய இன்னிங்ஸ் காலாகாலத்துக்கும் நினைவில் இருக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்திய அணி 32/4 என தத்தளித்துக்கொண்டிருந்தபோது கேப்டன் உதய் சஹாரனுடன் சேர்ந்து 171 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். அதிலும் 95 பந்துகளில் 96 ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார்.