நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்; மீண்டும் தடுமாறும் இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ரன் அவுட் ஆன விராட்
ரன் அவுட் ஆன விராட்pt web
Published on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி வென்ற நிலையில், கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 235 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ரன் அவுட் ஆன விராட்
சம்பவம் இருக்கு... நவம்பரில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு

பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 30 ரன்களுக்கும் ரோகித் சர்மா 18 ரன்களுக்கும் வெளியேறினர். முதல்நாள் இறுதி நேரத்தில் களத்திற்கு வந்த சிராஜ் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற பின் களத்திற்கு வந்த விராட் 4 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

முதல்நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது. களத்தில் கில் 31 ரன்களுடனும், பந்த் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முதல்நாள் முடிவில் இந்திய அணி 149 ரன்கள் பின் தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாளில் மட்டும் இரு அணிகளிலும் மொத்தமாக 14 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.

ரன் அவுட் ஆன விராட்
தமிழ்நாடு நாள்: திமுகவிற்கு நேரெதிரில் தவெக; என்ன சொல்கிறார் விஜய்; வாழ்த்தின் பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com