ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: ஷமி, அக்சர் இல்லை.. ராகுல், அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு!

நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்web
Published on

நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியானது 4 டி20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவிருக்கிறது. அதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
‘அவரது கேரியரில் மிக மோசமான ஷாட்டை விளையாடினார்..' விராட் கோலி விக்கெட் குறித்து மஞ்ச்ரேக்கர்!

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி..

தென்னாப்பிரிக்காவிற்கான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 7 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க சூர்யகுமார் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ஷிவம் துபே, ரியான் பராக் மற்றும் மயங்க் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர்.

ind vs sa
ind vs sa

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (C), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், ஆவேஷ் கான், யஷ் தயாள்.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
டிராவிட், புஜாராவிற்கு பின் மோசமாக வெளியேறிய பண்ட்.. 5 விக். அள்ளிய சாண்ட்னர்! சாதனையை நோக்கி NZ!

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி..

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி, நவம்பர் 15 முதல் ஜனவரி 6-ம் தேதி வரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

1991-1992 சீசனுக்குப் பிறகு முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக பார்டர்-கவாஸ்கர் டிராபி நடத்தப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டிய முக்கியமான தொடர் என்பதால் 18 வீரர்கள் கொண்ட ஆல்ரவுண்ட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ind vs aus
ind vs aus

ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன், வாசிங்டன் சுந்தர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர், வேகப்பந்துவீச்சுக்கு 3 பேக்கப் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி இணைக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முகமது ஷமி காயத்தால் இடம்பெறவில்லை, அக்சர் பட்டேல் ஏன் இணைக்கப்படவில்லை என்ற காரணம் சொல்லப்படவில்லை. புதிய இணைப்பாக பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா முதலிய வேகப்பந்துவீச்சாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அபிமன்யு ஈஸ்வரன்
அபிமன்யு ஈஸ்வரன்

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (WK), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), ஆர். அஷ்வின், ஆர். ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

பேக்கப் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
முடிவுக்கு வந்த 12வருட ஆதிக்கம்! 18 தொடர் வெற்றிக்குபின் சொந்த மண்ணில் IND தோல்வி; வரலாறு படைத்த NZ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com