W 0 W 0 W 0 0 W 0 W W! 6 வீரர்கள் டக்அவுட்... கடைசி 11 பந்தில் 6 விக்கெட்களை இழந்த இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 11 பந்துகளில் 6 விக்கெட்டை விட்டுக்கொடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ind vs sa
ind vs sacricinfo
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டீன் எல்கரின் 185 ரன்கள், ரபாடாவின் 5 விக்கெட்டுகள் என்ற தரமான தாக்குதலால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்கியது இந்திய அணி. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை பந்துவீசுமாறு அழைத்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 131 ரன்களுக்கே ஆல் அவுட்டான இந்திய அணி, இந்த போட்டியில் வாங்கிய அடியை திருப்பிக்கொடுக்கும் வகையில் பந்துவீசியது.

அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 9 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். உடன் பும்ரா மற்றும் முகேஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த 55 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி சுருண்டது. அதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

ind vs sa
பழிக்குப்பழி தீர்த்த இந்தியா: சீறிய சிராஜ்.. 55 ரன்களுக்குள் சுருண்ட தென்னாப்பிரிக்கா!

153/ 4 முதல் 153 ரன்னுக்கு ஆல்அவுட்!

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை டக் அவுட்டில் வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு கைக்கோர்த்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் 39 ரன்கள், கில் 36 ரன்கள் அடித்து வெளியேற, அதற்கு பிறகு களமிறங்கிய கிங் கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ind vs sa
ind vs sa

ஆனால் தொடர்ந்து களத்திற்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்னிலும், கேஎல் ராகுல் 8 ரன்னிலும் வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது. 153 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த 11 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது இந்திய அணி. லுங்கி இங்கிடி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினர். இந்திய வீரர்களில் 6 வீரர்கள் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

ind vs sa
ind vs sa

98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது.

ind vs sa
ஸ்ரீ ராமரை போல் போஸ் கொடுத்த விராட் கோலி! களத்தில் ஒலித்த “ராம் சியா ராம்” பாடல்! #ViralVideo

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com