IND vs PAK | பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து எட்டாவது வெற்றியைப் பதிவு செய்யுமா இந்தியா?

அஹமதாபாத் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கபூமி. முதல் போட்டியில் இங்கிலாந்து அடித்த ஸ்கோரை நியூசிலாந்து சேஸ் செய்த விதமே அது எப்படிப்பட்ட மைதானம் என்று உணர்த்தும்.
IND vs PAK
IND vs PAKTwitter
Published on

போட்டி 12: இந்தியா vs பாகிஸ்தான்

மைதானம்: நரேந்திர மோடி ஸ்டேடியம், அஹமதாபாத்

போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 13, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பை தொடரில் இதுவரை:

இந்தியா:

போட்டிகள் - 2, வெற்றிகள் - 2, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4

முதல் போட்டி: vs ஆஸ்திரேலியா - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி (52 பந்துகள் மீதம்)

இரண்டாவது போட்டி: vs ஆப்கானிஸ்தான் - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி (90 பந்துகள் மீதம்)

புள்ளிப் பட்டியலில் இடம்: மூன்றாவது

பாகிஸ்தான்

போட்டிகள் - 2, வெற்றிகள் - 2, தோல்வி - 0, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4

முதல் போட்டி: vs நெதர்லாந்து - 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இரண்டாவது போட்டி: vs இலங்கை - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி (10 பந்துகள் மீதம்)

புள்ளிப் பட்டியலில் இடம்: நான்காவது

மைதானம் எப்படி இருக்கும்?

அஹமதாபாத் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கபூமி. முதல் போட்டியில் இங்கிலாந்து அடித்த ஸ்கோரை நியூசிலாந்து சேஸ் செய்த விதமே அது எப்படிப்பட்ட மைதானம் என்று உணர்த்தும். ஐபிஎல் அரங்கிலும் அங்கு சுப்மன் கில் கணக்கற்ற அரைசதங்களும் சதங்களும் அடித்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் போட்டி நடக்கும் ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கும் ஸ்லோ பௌலர்களுக்கும் கைகொடுக்கக் கூடிய 'Black Soil' ஆடுகளமாக இருக்கலாம்.

சுப்மன் கில் விளையாடுவது 99 சதவிகிதம் உறுதி

இந்திய அணி இரண்டு போட்டிகளையும் வென்று நல்ல நிலையில் உள்ளது. நம்பிக்கையோடு இருக்கும் அணியில் இப்போது சுப்மன் கில்லும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக முதலிரு போட்டிகளிலும் ஆடாத கில், சென்னையில் இருந்து அஹமதாபாத் சென்றுவிட்டார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

அதனால் இந்தியாவின் முதல் சாய்ஸ் ஓப்பனிங் கூட்டணியான ரோஹித் - கில் கூட்டணியை இந்திய ரசிகர்கள் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாகப் பார்க்கப்போகிறார்கள். கில் வருகையால் இஷன் கிஷன் தன் இடத்தை இழப்பார்.

IND vs PAK
”பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 99% சுப்மன் கில் இருப்பார்” - ரோகித் சர்மா சொன்ன இனிப்பு தகவல்

அதேசமயம் அஹமதாபாத் மைதானத்தில் மிகச் சிறந்த ரெக்கார்ட் வைத்திருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்தப் போட்டியில் வாய்ப்பு பெறுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு நான்காவது பௌலரை தேர்வு செய்வோம் என்று கூறியிருக்கும் இந்திய அணி நிர்வாக சேப்பாக்கத்தில் ஆர் அஷ்வினையும், டெல்லியில் ஷர்துல் தாக்கூரையும் தேர்வு செய்தது.

முகமது ஷமி
முகமது ஷமிTwitter

அதே அடிப்படையில் இந்தப் போட்டியில் ஷமியை தேர்வு செய்யவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்துக்கு ஷர்துலின் பேட்டிங் பெரிதாகத் தேவைப்படாது என்பதால் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஷமி அணிக்குள் சேர்க்கப்படலாம்.

முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா பாகிஸ்தான்?

உலகக் கோப்பை என்றாலே இந்தியாவுக்கு எதிராக ஆடும்போது பாகிஸ்தான் அணி அதிக நெருக்கடியை சந்திக்கும். இதுவரை விளையாடிய 7 போட்டிகளையும் தோற்றிருக்கும் அந்த அணி, முதல் வெற்றிக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. அது கிடைக்கவேண்டுமெனில், ஒவ்வொரு வீரரும் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவேண்டும்.

குறிப்பாக ஓப்பனர் இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் ஆசம் இருவரும் இந்தப் போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடவேண்டும். மீண்டும் முகமது ரிஸ்வானையே நம்பியிருந்தால் அந்த அணிக்கு பிரச்சனை தான்.

இந்தியா vs பாகிஸ்தான் உலகக் கோப்பையில் இதுவரை:

1) 1992, சிட்னி - 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

2) 1996, பெங்களூரு - 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

3) 1999, மான்செஸ்டர் - 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

4) 2003, செஞ்சுரியன் - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

5) 2011, மொஹாலி - 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

6) 2015, அடிலெய்ட் - 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

7) 2019, மான்செஸ்டர் - 89 ரன்கள் (DLS முறை) வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

இந்தியா - சுப்மன் கில்:

அஹமதாபாத் ஆடுகளத்தில் சுப்மன் கில்லைத் தாண்டி யார் மீதும் நம் கண் போகாது. அதுவும் அவர் அணிக்கு மீண்டு வந்திருக்கும்போது அவர் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்று கவனிக்கவேண்டியது அவசியம்.

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் - ஷஹீன் அஃப்ரிடி:

இந்தியாவுக்கு எதிராக ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளரை கவனிக்கக் காரணம் தேவையா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com