INDvsAUS | மிரட்டிய இந்திய பௌலர்கள்... ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா 5 விக்கெட்டுகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான கம்பேக்கை அரங்கேற்றியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியிருக்கிறது மென் இன் புளூ.
பும்ரா, ராகுல்
பும்ரா, ராகுல்pt web
Published on

இந்தியாவின் கம்பேக்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான கம்பேக்கை அரங்கேற்றியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை வெறும் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியிருக்கிறது மென் இன் புளூ. குறிப்பாக இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா அணியை முன்னின்று வழிநடத்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பார்டர் கவாஸ்கர் தொடர்
பார்டர் கவாஸ்கர் தொடர்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் போட்டி பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய பௌலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அறிமுக வீரர் நித்தீஷ் குமார் ரெட்டி 41 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பும்ரா, ராகுல்
தேர்தல் முடிவுக்கு பின்னணியில் RSS...? விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி!

நம்பிக்கை குறையாத ஆட்டம்

இந்த செயல்பாட்டுக்குப் பிறகு இந்திய அணி அவ்வளவுதான் என்று தோன்றியது. ஏற்கெனவே கடைசி 3 டெஸ்ட் போட்டிகளையும் நியூசிலாந்துக்கு எதிராக தோற்றிருந்ததனால் இந்த செயல்பாடு மேலும் அனைவரின் நம்பிக்கையையும் உடைத்தது. ஆனால், இந்திய பௌலர்களுக்கு நம்பிக்கை குறைந்திருக்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்த ஆட்டத்தின் கேப்டன் பும்ராவுக்கு.

பும்ரா
பும்ராpt web

ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய வந்ததும், முதல் பந்து முதலே நெருப்பைக் கக்கினார் பும்ரா. தொடர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். அதன் காரணமாக விரைவிலேயே முதல் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுக வீரர் மெக்ஸ்வீனி பும்ராவின் இன்ஸ்விங்கை கணிக்க முடியாமல் பேடில் வாங்க, எல்பிடபுள்யூ முறையில் வெளியேறினார் அவர். அதிலிருந்து ஆஸ்திரேலியாவின் வீழ்த்தியும் தொடங்கியது. மூன்றாவது ஓவரில் மெக்ஸ்வீனியை வீழ்த்திய பும்ரா, ஏழாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை காலி செய்தார். முதலில் கவாஜா எட்ஜ் ஆகி கோலியிடம் கேட்சானார். அடுத்த பந்தில் கிடைத்தது மிகப் பெரிய விக்கெட்டான ஸ்டீவ் ஸ்மித்! கொஞ்சம் ஃபுல்லாக வீசப்பட்ட பந்தை அவர் சரியாக கணிக்க முடியாமல் போக, அவரும் எல்பிடபுள்யூ ஆனார். பௌன்ஸ் அதிகம் இருப்பதால் எல்பிடபுள்யூ ஆக வாய்ப்புகள் குறைவு என்று கருதப்படும் இந்த ஆடுகளத்தில் முதல் 3 விக்கெட்களில் இரண்டை எல்பிடபுள்யூ முறையில் கைப்பற்றினார் பும்ரா!

பும்ரா, ராகுல்
டெல்லி | வெறிச்சோடிக் காணப்படும் காங்கிரஸ் கட்சி அலுவலகம்... ஒரு தலைவர்கூட இல்லை!

இரண்டாம் நாளிலும் தொடர்ந்த ஆதிக்கம்

ஆரம்பத்திலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் கண்டது. லாபுசான் கொஞ்சம் நிதானமாக ஆட, டிராவிஸ் ஹெட் கவுன்ட்டர் அட்டாக்கை தொடங்கினார். ஹர்ஷித் ராணா ஓவரில் அவர் 2 பௌண்டர்கள் விளாசினார். ஆனால், கடைசியில் அவரது பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார் ஹெட். ஹர்ஷித் ராணா அட்டகாசமாக கிராஸ் சீம் டெலிவரி வீச, ஹெட் அதைத் தவறவிட, ஆஃப் ஸ்டம்பின் டாப்பை காலி செய்தது அந்தப் பந்து. அதன்பிறகு மிட்செல் மார்ஷ், லாபுசான், கம்மின்ஸ் என விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த அலெக்ஸ் கேரியை இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே காலி செய்தார் பும்ரா. இது அவருடைய 5வது விக்கெட்டாக அமைந்தது. அடுத்த சில ஓவர்களில் லயானை நித்திஷ் ராணா வெளியேற்ற, 79/9 என தடுமாறியது ஆஸ்திரேலியா. சீக்கிரம் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இருவரும் நிலைத்து நின்று ஆடத் தொடங்கினார்கள்.

பும்ரா, ராகுல்
“ஜார்க்கண்ட்டில் முழுக்க முழுக்க வெறுப்பு அரசியல்...” - மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்

அதிரடியில் இந்தியா

அந்த இணை சுமார் 18 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடி 25 ரன்கள் எடுத்தது. நிலைத்து நின்று 112 பந்துகள் ஆடிய ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தது அவர் தான். அதுமட்டுமல்ல இரண்டு அணிகளின் முதல் இன்னிங்ஸிலும் சேர்த்து அவ்வளவு பந்துகள் ஆடியது அவர்தான். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. 19 ஓவர்கள் முடிவில் விக்கெய்ட் இழப்பின்றி 72 ரன்களை எடுத்துள்ளது. கே எல் ராகுல் 27 ரன்களையும், ஜெய்ஸ்வால் 37 ரன்களையும் எடுத்துள்ளனர்.

பும்ரா, ராகுல்
முன்னாள் அமைச்சர் SP வேலுமணி, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. ஏன்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com