இந்தியாவின் கூடாரத்தைக் காலிசெய்த அஜாஸ்.. வரலாற்றுத் தோல்வி.. “நான் சிறப்பாக செயல்படவில்லை” - ரோகித்

நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
அஜாஸ் படேல்
அஜாஸ் படேல்pt web
Published on

IND vs NZ 3rd TEST

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 86 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இரண்டாவது நாளில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி சுப்மான் கில், ரிஷப் பந்த் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 263 ரன்களை எடுத்து, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. ரிஷப் பந்த் அரைசதம் அடிக்க, சுப்மான் கில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

25 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் ஒரு முனையில் நிதானமாக விளையாடி வில் யங், முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இரண்டாவது ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நியுசிலாந்து அணி 171 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியை விட 143 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி இருந்தது.

அஜாஸ் படேல்
கேரளா| ரயில்வே தடங்களை சுத்தம் செய்தபோது ரயில் மோதி உயிரிழந்த 4 தமிழர்கள்.. சோகத்தில் சேலம் கிராமம்!

ஆதிக்கம் செலுத்திய அஜாஸ்

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து 174 ரன்களை எடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக்கொள்ள இந்திய அணி 147 ரன்கள் எனும் இலக்கைக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கியது.

ஆனால், ரசிகர்களுக்குத்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முதலிரு ஓவர்களை இந்திய அணி அதிரடியாக ஆடினாலும், மூன்றாவது ஓவரின் இறுதிப் பந்திலேயே கேப்டன் ரோகித் வெளியேறினார். அப்போது சரிய ஆரம்பித்த சீட்டுக்கட்டு, இடையில் பந்த் தன்னால் முடிந்த வரை தூக்கி நிறுத்தியும் மீள முடியவில்லை.

ஜெய்ஸ்வால் 5, ரோகித் 11, கில் 1, கோலி 1, சர்ஃபராஸ் 1, ஜடேஜா 6, வாஷிங்டன் 12, அஸ்வின் 8, ஆகாஷ் தீப் 0 என வந்தார்கள் சென்றார்கள் மொமெண்ட்தான் இன்னிங்ஸ் முழுதும் இருந்தது. இடையில் பந்த் மட்டும் நிலையாக ஆடி 64 ரன்களை எடுத்தார். இறுதியில் இந்திய அணி 121 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 6 விக்கெட்களையும், ஃபிலிப்ஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்தியாவில் குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வெளிநாட்டுப் பந்துவீச்சாளர் என்ற பட்டியலில் அஜாஸ் படேல் முதலிடம் பிடித்துள்ளார். இவர் மும்பை வான்கடே மைதானத்தில் மட்டும் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அஜாஸ் படேல்
தென்காசி| குடும்பத் தகராறில் கணவன் அடித்ததில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம் - போலீசார் விசாரணை

இந்தியா ஒயிட்வாஷ்

3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்துள்ளது நியூசிலாந்து அணி. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் கதாநாயகனாகத் திகழ்ந்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் என 11 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவின் கூடாரத்தை காலி செய்துள்ளார்.

சொந்த மண்ணில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆவது இதுவே முதல்முறை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. அதேசமயத்தில் நியூசிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது உச்சத்தில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி முதன்முறையாக வென்றுள்ளது.

அஜாஸ் படேல்
“2026 சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி” - சேலத்தில் இபிஎஸ் பேச்சு!

போட்டி முடிந்து பேசிய கேப்டன் ரோகித், “ஒரு தொடரை இழப்பது, டெஸ்ட்டில் தோல்வி அடைவது எளிதில் ஜீரணிக்க முடியாத ஒன்று. நாங்கள் எங்கள் தொடரை சிறப்பாக விளையாடவில்லை, அது எங்களுக்குத் தெரியும். நியூசிலாந்து அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். தனிப்பட்ட முறையில் கேப்டனாகவும், ஒரு பேட்டராகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை” என தெரிவித்தார்.

அஜாஸ் படேல்
”10 நாளில் பதவி விலகணும்..” - யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்.. மும்பை போலீசார் தீவிர விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com