IND vs AFG | ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள்: ஹிட்மேன் ரோகித் அதிரடி

முதல் போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தாலும், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை அது பாதிக்கவில்லை. களமிறங்கியபோது உச்சபட்ச நம்பிக்கையோடு இருந்தார். அதை தன் ஆட்டத்திலும் வெளிப்படுத்தினார்.
Rohit sharma
Rohit sharmapt desk
Published on

போட்டி9: இந்தியா vs ஆப்கானிஸ்தான்

முடிவு: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி (ஆப்கானிஸ்தான் - 272/8; இந்தியா - 273/2, 35 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்தியா)

பேட்டிங்: 84 பந்துகளில் 131 ரன்கள். 16 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள்

Rohit sharma
Rohit sharmapt desk

முதல் போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தாலும், ரோகித் ர்மாவின் ஆட்டத்தை அது பாதிக்கவில்லை. களமிறங்கியபோது உச்சபட்ச நம்பிக்கையோடு இருந்தார். அதை தன் ஆட்டத்திலும் வெளிப்படுத்தினார் அவர். ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிங்கிள் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் ஹிட்மேன்.

முஜீப் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு டபுள்கள் எடுத்தார் அவர். அவ்வளவுதான். இரண்டு ஓவர்களில் நன்றாக செட்டில் ஆகிவிட்டிருந்தார் இந்திய கேப்டன். மூன்றாவது ஓவரில் இருந்தே தன் முரட்டு அதிரடியைக் காட்டத் தொடங்கினார் அவர்.

Rohit sharma
உடைக்கவே முடியாத World Record படைத்த ரோகித்! IPL மோதலுக்கு பின் கோலி - நவீன் செய்த Great சம்பவம்!

ஃபரூக்கி வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் பௌண்டரி அடித்து தன் இன்னிங்ஸின் வேகத்தை அதிகரித்தார் ரோகித். ஃபரூக்கியின் மூன்றாவது ஓவரிலேயோ 2 ஃபோர்களும், 1 சிக்ஸரும் பறந்தன. ஃபரூக்கி எப்படியேனும் ஒரு விக்கெட் எடுப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு தொடர்ந்து நான்காவது ஓவரும் கொடுத்தார் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி. அந்த முடிவு தவறாகவே அமைந்தது. ஏனெனில் அந்த ஓவரிலும் 2 ஃபோர்களும், 1 சிக்ஸரும் அடித்தார் ரோகித். பௌலரை மாற்ற நினைத்து அடுத்த ஓவரில் நவீன் உல் ஹக்கைக் கொண்டுவந்தார் ஷாஹிதி. அந்த ஓவரிலும் 1 ஃபோரும், 1 சிக்ஸரும் வந்தன. அந்த ஓவரில் அடித்து ஃபோரின் மூலம் அரைசதம் கடந்தார் ரோகித். அந்த அரைசதம் வெறும் 30 பந்துகளில் வந்தது.

Rohit sharma
Rohit sharmapt desk

கேப்டன் ரோகித் அதிரடியாக விளையாடியது மற்றொரு ஓப்பனர் இஷன் கிஷனுக்கும் பெரிய அளவு உதவிகரமாக இருந்தது. தொடக்கத்தில் சற்று தடுமாறிய அவர், ரன் ரேட் பற்றிய நெருக்கடி இல்லாததால் செட்டில் ஆக டைம் எடுத்துக்கொண்டார். இந்த வகையிலும் ரோகித்தின் இன்னிங்ஸ் பெருமளவு இந்தியாவுக்கு உதவியது.

இப்படி ரன்கள் சென்றுகொண்டே இருக்க, ஷாஹிதி பௌலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். ஒன்பதாவது ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் வந்தார். அந்த ஓவரிலும் ஒரு ஃபோரும், ஒரு சிக்ஸரும் வந்தது. முஜீப்பை 10வது ஓவரில் மீண்டும் கொண்டுவர, அந்த ஓவரிலும் ஒரு ஃபோர் அடித்தார் ரோகித். தன் வேகத்தைக் கொஞ்சமும் குறைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அதிரடி காட்டிய ரோகித் 63 பந்துகளில் சதம் கடந்தார். தாமதமாக வந்த ரஷீத் கான் ஓவரில் தொடர்ந்து 2 ஃபோர்களும், அடுத்த பந்திலேயே ஒரு சிக்ஸரும் அடித்தார் அவர். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 26வது ஓவரில் ரஷீத் கான் பந்துவீச்சில் போல்டானார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ரன்ரேட் எட்டில் இருந்தது!

ஒருவேளை இந்தியா முதலில் பேட்டிங் செய்திருந்தால் இன்று ரோகித்தின் நான்காவது இரட்டை சதம் வந்திருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது ரோகித்தின் வெறித்தன பேட்டிங்.
Rohit
Rohit

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா முறியடித்த சாதனைகள்:

* உலகக் கோப்பை அரங்கில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்தவர்

* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்

* உலகக் கோப்பை அரங்கில் 7 சதங்கள் அடித்த முதல் வீரர்

ஆட்ட நாயகன் ரோகித் சர்மா என்ன கூறினார்?

"இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. என்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாடவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். நான் இந்த ஆடுகளத்தில் ஓரளவு செட்டில் ஆகிவிட்டால், அதன்பிறகு ஆட்டம் எனக்கு எளிதாகிவிடும் என்று தெரியும். உலகக் கோப்பையில் சதம் அடிப்பது என்பது மிகவும் ஸ்பெஷலான விஷயம். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உலகக் கோப்பையில் 7 சதங்கள் அடித்தது பற்றி அதிகம் நினைக்க விரும்பவில்லை.

Rohit
Rohit
Rohit sharma
“நானோ கோலியோ சதமடிப்பது முக்கியமல்ல.. எங்களுடைய ஆன்மா உலகக்கோப்பை வெல்லவே போராடும்!” - ரோகித் சர்மா

என்னுடைய கவனத்தை நான் சிதறடிக்க விரும்பவில்லை. இதுபோன்ற விஷயங்கள் நமக்கு மேலும் சாதகம் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதை இன்னும் பெரிதாக்க வேண்டும். அணிக்க நல்ல தொடக்கம் கிடைப்பதற்கு நான்தான் பொறுப்பு. அதிலும் குறிப்பாக இது போன்ற சேஸ்களில். கடந்த காலத்தில் அதை நான் செய்திருக்கிறேன். அதை செய்வது எனக்கு மிகவும் சந்தோஷமான ஒன்று. பௌலர்களை அட்டாக் செய்வது சில நேரங்களில் கைகொடுக்கும், சில நேரங்களில் கைகொடுக்காது. ஆனால் அதை முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும். எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சித்துக்கொண்டே இருக்கவேண்டும்" - ரோகித் சர்மா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com