Unstoppable Hit-Man... ரோகித் சர்மாவின் மறக்கமுடியாத ருத்ரதாண்டவ இன்னிங்ஸ் என்னென்ன தெரியுமா?

இன்றுடன் 37 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் ரோகித் சர்மா. இன்றும் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் ரசிகர்களைப் பித்துப்பிடிக்க வைக்கிறது. அப்படி என்னதான் செய்துவிட்டார் ரோகித் சர்மா? ஹிட் மேன் என ரசிகர்கள் கொண்டாடுவது காரணம் இல்லாமலா?
rohit sharma
rohit sharmapt web
Published on

unstoppable எனும் வார்த்தைக்கு உண்மையான சொந்தக்காரர் ரோகித் சர்மா மட்டும்தான். டெஸ்ட் போட்டிகளில் பொறுமையாக அடித்தும், ஒரு நாள் போட்டிகளில் தேவையான நேரம் அடித்தும், டி20 போட்டிகளில் அதிரடியோடும் இவர் ஆட ஆரம்பித்தால் எதிரணி சற்று களங்கித்தான் போகும்.

ரோகித்தின் வீக்னெஸ்

rohit sharma
rohit sharma

ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு வீக்னெஸ் இருக்கும். அப்படி ரோகித் சர்மாவிற்கும் உள்ளது. இடது வேகப்பந்து வீச்சாளர்கள் ரோகித்திற்கு சற்று பிரச்னைதான். ஆனால் அதை தனது ஆட்டத்திற்கு பாதிப்பு இல்லாத வண்ணம் கையாள்வதில் ரோகித் எப்போதும் சிறந்தவர்.

“நீங்கள் சொல்லும் பலவீனம் என்பது கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அவருக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களைக் கையாள்வதில் எந்தப்பிரச்சனையும் இருந்ததில்லை” என மஞ்ரேக்கர் ஒருமுறை ரோகித் சர்மா குறித்து கூறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

rohit sharma
“என் அணியில் அஸ்வினுக்கு இடமில்லை.. அடுத்த சீசனில் அவர் விற்கப்படாமல் போகலாம்” - சேவாக்

ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் இருந்த ரோகித் சர்மாவின் ஆட்டத்திற்கும், அவர் உச்சத்தில் இருக்கும் தற்போது ஆடும் ஆட்டத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக அவர் ஆடுகையில் தனது பாதத்தை across the lineல் வைத்து ஆடும்போது, தனது பலவீனத்தையும் பலமாக மாற்றுகிறார் ரோகித் சர்மா.

ஐபிஎல்லில் மறக்கமுடியாத இன்னிங்ஸ்

WTC Final
WTC Final

limited-over cricket எனும் வரும்போது ரோகித் சர்மாவின் ஆட்டம் என்பது வேறு ரகம். ஆக்ரோஷமான, அதே சமயத்தில் தேர்ந்தெடுத்த ஷாட்கள் என்பது அவரது தனித்தன்மை. உதாரணமாக இரு ஐபிஎல் இன்னிங்ஸை சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு கொல்கத்தா உடனான போட்டியில், அவர் அடித்த 98 ரன்கள், 2018 ஆம் ஆண்டு பெங்களூர் உடனான போட்டியில் அவர் அடித்த 94 ரன்கள் தான் அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல, நின்று ஆடும் வீரர் என்பதை உணர்த்தினார்.

rohit sharma
ராகுல் OUT சாம்சன் IN- t20 WC அணியில் யாருக்கு இடம்.. துபே? புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக தகவல்

கொல்கத்தா உடனான போட்டியின் போது, முதலில் ஆடிய மும்பை அணியின் விக்கெட்கள் சரிந்துகொண்டே வந்தது. ஆரோன் பின்ச் 5 ரன்கள், ஆதித்யா 7 ரன்கள், ராயுடு டக் என விக்கெட்கள் விழுந்தது. கோரி ஆண்டர்சனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா இன்னிங்ஸ் முழுவதும் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

Rohit
RohitTwitter

அடுத்து பெங்களூர் உடனான போட்டி. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய சூர்யகுமார், ஒன் டவுனில் இறங்கிய இஷான் கிஷான் இருவரும் முதல் இரண்டு பந்துகளிலேயே உமேஷ் யாதவ் பந்தில் டக் அவுட். 4 ஆவது பேட்ஸ்மேனான ரோஹித் இன்னிங்ஸின் மூன்றாவது பந்திலேயே இறங்கினார். நிதானமான ஆட்டம்.

14 ஆவது ஓவரின் முடிவுவரை ரோகித் 30 பந்துகளை மட்டுமே ஆடி 40 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து அவர் ஆடியது ருத்ரதாண்டவம். ஓவருக்கு ஓவர் பவுண்டரிகள், சிக்ஸர்கள் பறந்தன. அந்த போட்டியில் மொத்தமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 94 ரன்களைக் குவித்திருந்தார். 10 பவுண்டரிகள். 5 சிக்ஸர்கள் அடக்கம்.

Rohit Sharma
Rohit Sharma

இதற்கெல்லாம் முன்பே ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுடன் அவர் இரட்டை சதங்கள், 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த இரட்டை சதம் போன்றவை எல்லாம் அனைவராலும் பேசப்பட்ட ஒன்று.

rohit sharma
கத்திமுனையில் 9 அணிகள்; இதெல்லாம் நடந்தா RCB Playoffs செல்லும்! CSK அணிக்கு இருக்கும் ஆபத்து?

ரோகித்தின் சாதனைகள்

இதுவரை 472 சர்வதேச போட்டிகளில் 18820 ரன்களைக் குவித்துள்ளார் ரோகித் சர்மா. அதில் அதில் 48 சதங்கள், 101 அரைசதங்கள் அடக்கம். சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தவர் ரோகித். இதுவரை அவர் அடித்துள்ள சிக்ஸர்கள் மட்டும் 597.

rohit sharma
rohit sharma

அதுமட்டுமின்றி 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த இரண்டாவது வீரர், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்களை அடித்த வீரர், அதிகமுறை இரட்டை சதமடித்த வீரர் என பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார் ரோகித்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிற்கும் இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார் ரோகித். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை 73.91% வெற்றி சதவீதமாக வைத்துள்ளார். அடுத்து நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக நியமனம் செய்யப்ட்டுள்ளார் ரோகித். இந்த முறையாவது கோப்பை வசப்படட்டும்...

rohit sharma
‘Low Score-ல கூட 14 எகானமி..’ பாழாய் போகும் 24 கோடி.. கம்பீரை மதிக்காத ஸ்டார்க்! KKR வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com