IND Vs BAN: வெளியேறிய ஹர்திக் பாண்டியா.. நீண்டநாட்களுக்குப் பிறகு பந்துவீசிய விராட் கோலி!

வங்கதேச போட்டியில் ஹர்திக் பாண்டியா காயம்பட்டதைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
கோலி, ஹர்திக் பாண்டியா
கோலி, ஹர்திக் பாண்டியாட்விட்டர்
Published on

உலகக்கோப்பை தொடரில், இன்று (அக்.19) இந்தியா - வங்கதேச ஆகிய அணிகள் மகாராஷ்டிராவில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் ஜெயித்த வங்கதேச அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து ஆடி வருகிறது.

இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால், அவர் இந்த இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: “வங்கதேச அணியினர் இந்தியாவை வீழ்த்தினால் என்னோடு அமர்ந்து சாப்பிடலாம்” - பாகிஸ்தான் நடிகை அறிவிப்பு!

முன்னதாக, வங்கதேச அணி, இன்னிங்ஸின் 9வது ஓவரை எதிர்கொண்டது. அந்த ஓவரை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வீசினார். அவரது பந்துவீச்சை வங்கதேச அணியின் தொடக்க பேட்டர் லிட்டன் தாஸ் எதிர்கொண்டு விளையாடினார். இதில், லிட்டன் தாஸ் நேராக அடித்த பந்து ஒன்றை காலால் தடுக்க முயன்று கீழே விழுந்த பாண்டியாவுக்கு வலது கால் முட்டியில் அடிபட்டது.

இதையடுத்து, மருத்துவக் குழு உள்ளே வந்து அவருக்கு சிகிச்சை செய்தது. ஆனாலும் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியாமல் வெளியே சென்றுவிட்டார். அப்போது அவர் 3 பந்துகளை மட்டும் வீசி 8 ரன்களை வழங்கி இருந்தார்.

இதையடுத்து, மீதமிருந்த 3 பந்துகளை வீசுவதற்கு (1 ஓவருக்கு 6 பந்துகள்) கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியை அழைத்தார். நீண்டநாட்களுக்குப் பிறகு பந்துவீசிய விராட் கோலி, அந்த 3 பந்துகளில் 2 ரன்களை விட்டுக் கொடுத்தார். நீண்டநாட்களுக்குப் பிறகு விராட் கோலி பந்துவீசிய புகைப்படங்களும், வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்திய அணிக்காக 600 பந்துகளுக்கு மேல் ஒருநாள் போட்டிகளில் வீசியுள்ள விராட் கோலி இதுவரை 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதேபோல், சர்வதேச டி20 போட்டிகளிலும் 4 விக்கெட் எடுத்துள்ளார்.

அதேநேரத்தில், ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறி இருப்பது, இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: கர்நாடகா: போர்க்கொடி தூக்கிய சி.எம்.இப்ராஹிம் அதிரடி நீக்கம்.. அடுத்த மஜத மாநில தலைவர் குமாரசாமி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com