"நாங்கள் யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை; இருந்தாலும்.." - மன்னிப்பு கேட்டு பதிவிட்ட ஹர்பஜன் சிங்!

ஊனமுற்றவர்களை கேலிசெய்ததாக யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா முதலிய முன்னாள் வீரர்கள் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டு செய்திவெளியிட்டுள்ளார்.
yuvraj - harbhajan - raina
yuvraj - harbhajan - rainaweb
Published on

யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் அணி யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி 2024 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் கோப்பையை தட்டிச்சென்றது.

லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் யுவராஜ் சிங் முதலிய முன்னாள் இந்திய வீரர்கள் பதிவிட்ட வீடியோ பதிவானது பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.

yuvraj - harbhajan - raina
'எம் எஸ் தோனிக்கு இடமில்லை..' தன்னுடைய ஆல்டைம் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த யுவராஜ் சிங்!

வீடியோவில் என்ன தவறாக இருந்தது?

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரெய்னா ஆகியோர் முதுகைப் பிடித்துக் கொண்டு நொண்டி வருவதை போல சைகை செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்த வீடியாவை சமூக வலைதளங்களில் கண்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் வீடியோவை அருவருப்பானதாகக் விமர்சித்தனர். மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய தளமானது தங்களுடைய X பக்கத்தில் கிரிக்கெட் வீரர்களின் வீடியோவை பகிர்ந்து "முற்றிலும் அவமானகரமானது" என்று எதிர்ப்பை தெரிவித்தது.

மேலும், வீடியோவை பார்த்த மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி காவல் நிலையத்தில் வீரர்கள் மற்றும் மெட்டா நிறுவனத்தின் மீது புகாரளித்தார்.

yuvraj - harbhajan - raina
’இதுபோல சுயநலமான வீரரை பார்த்ததில்லை..’ ஜெய்ஸ்வாலின் சதத்தை தடுத்த கில்? விளாசும் ரசிகர்கள்!

மக்கள் தவறு செய்ததாக நினைத்தால் மன்னித்து விடுங்கள்!

பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கும் ஹர்பஜன் சிங், ”நாங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதை செய்யவில்லை, ஒருவேளை நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் பதிவிட்டிருக்கும் பதிவில், “இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு, சமூக ஊடகங்களில் நாங்கள் பதிவிட்ட வீடியோ வீது புகார் செய்யும் மக்களுக்குத் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். யாருடைய மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை, ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். 15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு இந்த வீடியோவை எங்கள் உடல்வலியை பிரதிபலிக்கும் வகையில் தான் நாங்கள் பதிவிட்டிருந்தோம்.

நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.. இன்னும் மக்கள் நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால்.. என் தரப்பிலிருந்து மன்னித்து கேட்டுகொள்கிறேன். தயவு செய்து இதை இங்கேயே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவருக்கும் என்னுடைய அன்புகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

yuvraj - harbhajan - raina
’மிகவும் வலிக்கிறது’ கேன்சரால் தவிக்கும் சகவீரருக்காக நிதி திரட்டும் கபில்தேவ்! BCCI உதவ கோரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com