”தோனியை ரன்அவுட் செய்ததற்காக இன்றும் என்னைத் திட்டி மெயில்கள் வருகின்றன” - மார்டின் கப்டில்

”2019 தோனி ரன் அவுட்டிற்காக இன்னும் இந்திய ரசிகர்கள் எனக்கு வெறுப்பு மெயில்கள் அனுப்பி வருகின்றனர். மொத்த இந்தியாவிற்கும் என்னை பிடிக்கவில்லை”- மார்டின் கப்டில்
Dhoni run out
Dhoni run outweb
Published on

2023 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் கடினமான கேட்ச்சை பிடித்த டிராவிஸ் ஹெட், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தூக்கத்தை தற்போது கெடுத்துள்ளார். ஆனால் இந்த உலகக்கோப்பையில் தோன்றதிற்கு பின்னும், 2019 உலகக்கோப்பையின் தோனியின் ரன் அவுட்டிற்காக பல இந்திய ரசிகர்கள் இன்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் யாரோ ஒரு எதிரணி வீரர்கள் தட்டிப்பறிக்கும் போது, கோப்பை வெல்லாத தங்களது ஹீரோக்களை கண்ணீர் மல்க பார்க்கும் தீவிர ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் இன்னமும் 2019 தோனியின் ரன் அவுட்டுக்காக தன்னை திட்டி வெறுப்பு மெயில்கள் வருவதாக நியூசிலாந்தின் மார்டின் கப்டில் தெரிவித்துள்ளார். தற்போது 2023 லெஜண்ட்ஸ் லீக்கில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பனைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார் மார்டின் கப்தில். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கப்தில் தற்போது லெஜண்ட்ஸ் லீக்கிலும் தன்னுடைய அட்டாக்கிங் பேட்டிங்கால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவருகிறார். இந்நிலையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடன் பேசியிருக்கும் கப்தில், 2019 உலகக்கோப்பையில் தோனியின் ரன் அவுட் குறித்து பேசியுள்ளார்.

மொத்த இந்தியாவுக்கும் என்னை பிடிக்கவில்லை! - மார்டின் கப்தில்

2019-ல் இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்த ரன் அவுட் குறித்து பேசியிருக்கும் மார்டின் கப்தில், “அந்த மொமண்ட்டில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த விஷயங்களில் அதுவும் ஒன்று. தோனி அடித்த பந்து மேலே செல்வதைப் பார்த்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அப்போது தான் எனக்கு தோன்றியது அது என்னை நோக்கி தான் ஒருவிதமாக வருகிறது. பந்தை பிடிப்பதற்கு வேகமாக ஓடினேன், அப்போதும் ஸ்டம்ப்களில் எறிவதற்கான வாய்ப்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒன்றரை ஸ்டம்புகள் மட்டுமே என் பார்வைக்கு தெரிந்தன. இருப்பினும் நான் ஸ்டம்பை நோக்கி அடிக்க முயற்சித்தேன், எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. அந்த கனத்தில் எல்லாமே கைக்கூடி வந்தது. நட்சத்திரங்கள் நேராக மாறி, ஒரு சரியான வீசுதல் அரங்கேறியது” என்று கூறியுள்ளார்.

dhoni run out
dhoni run out

மேலும் “அதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த ரன் அவுட் நடந்ததற்கு பிறகு மொத்த இந்தியாவிற்கும் என்னை பிடிக்கவில்லை. இந்திய ரசிகர்களிடம் இருந்து இன்னமும் எனக்கு ஏராளமான வெறுப்பூட்டும் மின்னஞ்சல்கள் வருகின்றன" என கப்தில் கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் நியூசிலாந்தின் முக்கியமான பந்துவீச்சாளர்கள் ஸ்பெல்கள் முடிந்திருந்தன. ஜிம்மி நீஷம் மட்டுமே கடைசி ஓவரை வீசுவதற்கு இருந்தார். அந்தப்போட்டியில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த பவுலராக நீஷம் இருந்ததால் இந்தியாவின் வெற்றி நிச்சயமாக சாத்தியமான ஒன்றாகவே இருந்தது. ஒருவேளை தோனி இறுதிஒவரை சந்தித்திருந்தால் இந்தியாவின் வெற்றி வீதம் 90%-ஆக இருந்திருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com