’விராட் கோலி என்னை பிளாக் செய்தார்.. 4 வருடம் நான் பேசவில்லை’ - மேக்ஸ்வெல் பகிர்ந்த மொரட்டு சம்பவம்!

விராட் கோலி ஃபீல்டிங்கில் நடந்த ஒரு மோசமான நிகழ்வுக்கு பிறகு தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்ததாக க்ளென் மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார்.
விராட் கோலி - க்ளென் மேக்ஸ்வெல்
விராட் கோலி - க்ளென் மேக்ஸ்வெல்web
Published on

நட்சத்திர அதிரடி வீரரான க்ளென் மேக்ஸ்வெல் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் வகையில் ”ஷோமேன்” என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்தபோது சேவாக் உடன் ஏற்பட்ட மோதல் குறித்து பேசியிருந்த க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி உடனான மோதல் குறித்தும் எழுதியுள்ளார்.

2021 ஐபிஎல் ஏலத்தின்போது ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது. க்ளென் மேக்ஸ்வெல ஆர்சிபி அணியில் இணைந்த போது “விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்” என ஒரு வெடித்து சிதறும் வலுவான பேட்டிங் காம்பினேஷனை ஆர்சிபி கொண்டிருந்தது. அதற்குபிறகு “கோலி, க்ளென் மேக்ஸ்வேல், ஃப்ஃப் டூபிளெசி” மூன்று வீரர்களையும் சேர்த்து KGF என ரசிகர்கள் அழைத்தனர்.

kohli - maxwell
kohli - maxwell

இப்படி கடந்த 3 வருடங்களாக விராட் கோலியின் அணியில் முக்கிய வீரராக ஜொலித்த மேக்ஸ்வெல், விராட் கோலி உடனும் நல்ல நட்பை பகிர்ந்து வருகிறார்.

ஆனால் இதற்கெல்லாம் முன்னதாக 2017-ல் விராட் கோலி உடனான மோதல் குறித்தும், அதற்குபிறகு கோலி தன்னை பிளாக் செய்தது குறித்தும் மேக்ஸ்வெல் பேசியுள்ளார்.

விராட் கோலி - க்ளென் மேக்ஸ்வெல்
294 பந்துகள் களத்தில் நின்று மிரட்டலான ஆட்டம்.. ரஞ்சிக்கோப்பையில் பேட்ஸ்மேனாக மாறிய சாஹல்!

என்னை பிளாக் செய்தீர்களா? ஆமாம், நீ கிண்டல் செய்ததால்..

2017-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர் இந்தியா கம்பேக் கொடுத்து தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்நிலையில் அந்த தொடரில் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி உடன் ஏற்பட்ட மோதல் குறித்து க்ளென் மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார். அப்போது 3வது டெஸ்ட் போட்டியின் போது முதலில் பீல்டிங் செய்த இந்திய அணியில், விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த இன்னிங்ஸில் க்ளென் மேக்ஸ்மெல் சதமடித்து அசத்தியிருந்தார்.

maxwell - kohli
maxwell - kohli

பின்னர் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்யதபோது, விராட் கோலியின் தோற்பட்டை காயம் குறித்து, கிளென் மேக்ஸ்வெல் நடித்து காட்டி, கோலி செய்து சீண்டிக் கொண்டே இருந்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் முகபாவனைகளை இஷாந்த் சர்மா கிண்டல் செய்தார், இப்படி இரு அணி வீரர்களும் மாறிமாறி முறைத்துக் கொண்டேதான் இருந்தார்கள்.

இந்நிலையில், அன்றைய தினம் மேக்ஸ்வெல் அப்படி நடந்து கொண்டதால், மேக்ஸ்வெலை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் தளத்தில் கோலி பிளாக் செய்தார். இதனை மறுநாள் அறிந்துகொண்ட மேக்ஸ்வெல், கோலியிடம் சென்று, ‘என்னை பிளாக் செய்தீர்களா’ என களத்தில் கேட்க, கோலியும், ‘ஆம், நீ என்னை கிண்டல் செய்தாய், அந்த நேரத்தில் நான் அப்படி செய்தேன்’ எனக் கூறியுள்ளார். பின்னர் விராட் கோலி அன்பிளாக் செய்துள்ளார்.

விராட் கோலி - க்ளென் மேக்ஸ்வெல்
‘அவரது கேரியரில் மிக மோசமான ஷாட்டை விளையாடினார்..' விராட் கோலி விக்கெட் குறித்து மஞ்ச்ரேக்கர்!

ஆர்சிபி அணிக்கு வந்தபோது எல்லாமே தலைகீழாக மாறியது..

இந்த சம்பவத்தை, தற்போது தனது புத்தகத்தில் கிளென் மேக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்படி சண்டை நடந்தப் பிறகு, 2020ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சர்ச்சை தொடர்ந்த சமயத்தில், 2021 ஏலத்தில் கோலிதான் என்னை, ஆர்சிபி அணிக்கு கொண்டு வந்தார் என மேக்ஸ்வெல் நெகிழ்ச்சியுடன், அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், ‘‘என்னை ஆர்சிபி அணி வாங்கியப் பிறகு, ஆர்சிபியில் இருந்து முதல் வாழ்த்து, கோலியிடம் இருந்துதான் வந்தது. வெல்கம் என மெசேஜ் அனுப்பி இருந்தார். 2017 சர்ச்சைக்கு பிறகு கோலியிடம் தான் தனிப்பட்ட முறையில் பேசியது கிடையாது. களத்திலும் அவ்வளவாக பேசிக் கொண்டது கிடையாது. ஆனால், ஆர்சிபிக்கு வந்தப் பிறகு, ஏதோ நீண்ட கால நண்பரிடம் பழகுவது போல் கோலி என்னிடம் பழகினார்’’ எனக் கூறினார்.

kohli - maxwell
kohli - maxwell

ஐபிஎல் 2021 தொடரில், ஆர்சிபி அணியில் இடம்பெற்ற கிளென் மேக்ஸ்வெல், தொடர்ந்து காட்டடி அடித்து, 500+ ரன்களை குவித்து அசத்தினார். இதனால்தான், ஆர்சிபி அணியால் பிளே ஆப் வரை முன்னேற முடிந்தது. ஆனாலும் ஆர்சிபி அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி - க்ளென் மேக்ஸ்வெல்
”தவறிலிருந்து ஓடிவிட முடியாது.. கோலி இதை செய்தே ஆகவேண்டும்!” - தினேஷ் கார்த்திக் அட்வைஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com