“சேப்பலைவிட கொஞ்ச காலம்தான்” - கவுதம் கம்பீர் பதவிக்கு நாள் குறித்த நியூசிலாந்து வீரர்!

“இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீர் விரைவில் நீக்கப்படுவார்” என நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.
கம்பீர், சைமன் டவுல்
கம்பீர், சைமன் டவுல்எக்ஸ் தளம்
Published on

ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இவர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றாலும், அதன்பிறகு தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இது, இந்திய அணிக்குப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடரை வென்றால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியும் என்ற நிலை இந்தியாவிற்கு உள்ளது. இதனால், கவுதம் கம்பீர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மேலும், சமீபத்தில் பிசிசிஐ சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதுடன், கம்பீரையும் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்web

இந்த நிலையில், “இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீர் விரைவில் நீக்கப்படுவார்” என நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி | இந்தியா வராவிட்டால் 844 கோடி ரூபாய் இழப்பு.. எச்சரிக்கும் சோயிப் அக்தர்!

கம்பீர், சைமன் டவுல்
ரிஷப் பண்ட்டின் காயத்தின் நிலை என்ன? 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா? கவுதம் கம்பீர் பதில்!

இதுகுறித்து அவர், “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் ஒன்றரை ஆண்டுதான் பதவியில் நீடித்தார். தற்போது கம்பீர் அதனைவிட மிகக் குறைந்த காலமே பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பார் என்று நினைக்கின்றேன். நாம் கம்பீருக்கு எதிராக விளையாடி இருப்போம். இல்லையெனில், அவருடன் இணைந்து கிரிக்கெட் வர்ணனை செய்திருப்போம். கம்பீர் எப்படிப்பட்ட கேரக்டர் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் கம்பீர் போல ஒரு நபர் இந்திய அணிக்கு தற்சமயம் தேவையா என்பதை பிசிசிஐ யோசிக்க வேண்டும்.

வீரர்களுடன் இணைந்து அவர்களை எவ்வாறு சிறப்பாக விளையாட வைக்க வேண்டும் என்பது கம்பிருக்கு நன்றாக தெரியும். ஆனால் இது போன்ற மிகப்பெரிய தொடரில் கம்பீரிடமிருந்து அதை எதிர்பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று. கம்பீர் எப்போதுமே ஊடகங்களுடன் நட்புணர்வுடன் இருக்கமாட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த முடிவைப் பெறாமல், தோல்வியைத் தழுவினால் நிச்சயமாக அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் ஒன்றரை ஆண்டுதான் பதவியில் நீடித்தார். தற்போது கம்பீர் அதனைவிட மிகக் குறைந்த காலமே பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பார் என்று நினைக்கின்றேன்
சைமன் டவுல், நியூசிலாந்து முன்னாள் வீரர்

சைமன் டவுலின் இந்த கருத்தை, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர், “வெளியேதான் கம்பீர் கோபப்படுகிறார். ஆனால், வீரர்களிடம் அன்பாகத்தான் நடந்துகொள்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மசோதாவிற்கு எதிர்ப்பு | திரண்ட 42,000 பேர்.. மாவோரி இன மக்களின் போராட்டத்தால் திணறிய நியூசிலாந்து!

கம்பீர், சைமன் டவுல்
கருணையே இல்லை.. ஆஸியில் முடிவுகள் சரியாக இல்லை என்றால் கம்பீர் நீக்கப்படுவார்..? வெளியான தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com