டைமிங்கில் கலாய்த்த கவுதம் கம்பீர்.. விழுந்து சிரித்த விராட் கோலி! பிசிசிஐ பகிர்ந்த ஸ்பெஷல் வீடியோ!

தங்களை சுற்றி நடந்த மசாலாவுக்கெல்லாம் முற்றிப்புள்ளிவைக்கும் விதமாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் ஒருவரை ஒருவர் நேர்காணல் செய்துள்ளனர்.
gautam gambhir - virat kohli
gautam gambhir - virat kohliweb
Published on

விராட் கோலிக்கு எப்போதும் களத்தில் எதிரணி வீரர்களுடன் போட்டியிடுவது பிடித்தமான விசயமாக இருந்துவருகிறது, அப்படி ஆக்ரோசமாக நடந்துகொள்வது அவருடைய சிறந்ததை வெளிக்கொண்டுவருவதாக ஒருமுறை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோலான அணுகுமுறை கொண்டவர் தான் இந்தியாவின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும். கோலியை போலவே கவுதம் கம்பீரும் களத்தில் ஆக்ரோசமான அணுகுமுறையை வெளிப்படுத்தக்கூடியவர், சொல்லப்போனால் எதிரணி வீரர்களுடன் சண்டைக்கு செல்வதில் விராட் கோலிக்கு முன்னேடியாக இருந்தவர் கவுதம் கம்பீர்.

இந்த இரண்டு ஆக்ரோசமான வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கடந்த ஐபிஎல் போட்டியின் மோதலானது, இரண்டு ரசிகர்களையும் இரண்டு திசைகளாக பிரித்துவைத்துள்ளது.

இந்நிலையில் தங்களை சுற்றி நடந்த மசாலா விசயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும் இடையே நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளது பிசிசிஐ.

gautam gambhir - virat kohli
‘டிரக் மீது ஏறி டிரைவருடன் சண்டைக்கு சென்ற கம்பீர்..’ - முன்னாள் வீரர் பகிர்ந்த பழைய சம்பவம்!

பங்கமாக கலாய்த்த கம்பீர்.. விழுந்து சிரித்த விராட் கோலி!

இந்திய அணியின் இரண்டு ஸ்பெசல் டெல்லி சகோக்களுக்கு இடையேயான நேர்காணல் வீடியோவின் கிளிப் ஒன்றை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அதில் 2011 ஒருநாள் உலகக்கோப்பையில் எப்படி இரண்டு டெல்லியை சேர்ந்த வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர் என்ற வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

நேர்காணலில் பேசிய விராட் கோலி, ”எங்கள் இருவருக்கும் இடையேயான மசாலா நிகழ்வுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வீடியோ இது” என குறிப்பிட்டுள்ளார். கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சிரித்த முகத்துடன் வீடியோவில் பேசியுள்ளனர்.

கவுதம் கம்பீரிடம் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது உங்களது கவனத்தை குறைத்துவிடுமா அல்லது உங்களுடைய சிறந்ததை வெளிக்கொண்டுவருமா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு கம்பீர் அளித்த பதிலை கேட்டு விராட் கோலி விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

விராட் கோலி: நீங்கள் பேட்டிங் செய்யும்போது, ​​எதிரணி வீரர்களுடன் பேசிக்கொள்வீர்கள். அப்படி செய்யும்போது உங்களுடைய கவனத்தை விட்டு வெளியே சென்று அவுட்டாகி விடுவீர்கள் என நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அது உங்களை அதிக உந்துதலுக்கு உள்ளாக்குமா? என்ற கேள்வியை எழுப்பினார்.

கவுதம் கம்பீர்: என்னை விட நீங்கள் தான் அதிகப்படியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். இந்த கேள்விக்கு என்னை விட உங்களால் தான் சிறந்த பதிலை அளிக்க முடியும் என்று நினைக்கிறேன் என சிரித்துக்கொண்டே டைமிங்கில் கலாய்த்தார். இந்த பதிலை எதிர்ப்பார்க்காத விராட் கோலி விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் அந்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, “நான் சொல்வதை ஒத்துக்கொள்ளும் ஒருவரைத் தான் தேடுகிறேன். அதைத் தவறு என்று சொல்லமாட்டேன் களத்தில் அப்படித்தான் நடக்கும்” என்று கூறினார்.

இருவருக்கும் இடையேயான நேர்காணல் வீடியோவை அதிகப்படியான ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

gautam gambhir - virat kohli
கால்பந்து விளையாடியபோது மாரடைப்பு.. துபாய் சென்ற 23 வயது கேரளா இளைஞர் மரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com