ஹர்திக்கிற்கு ஏன் கேப்டன்சி இல்லை? ஜடேஜா நிலை என்ன? 2027 WC-ல் ரோகித்?- கம்பீரின் 7 முக்கிய பதில்கள்

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர், அணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பீர் - அகர்கர்
கம்பீர் - அகர்கர்x
Published on

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஜூலை 27 முதல் ஆகஸ்டு 7ம் வரை, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பில் இருந்த ராகுல் டிராவிட், 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் கோப்பைக்கனவை நிறைவேற்றிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

india t20 world cup 2024
india t20 world cup 2024

இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கவுதம் கம்பீர், ஜூலை 27 முதல் நடைபெறவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களிலிருந்து இந்தியாவை தலைமையேற்று வழிநடத்த உள்ளார்.

கம்பீர், பிசிசிஐ
கம்பீர், பிசிசிஐஎக்ஸ் தளம்

சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இத்தகைய சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தன்னுடைய முதல் செய்தியாளர் சந்திப்பை எதிர்கொண்ட கம்பீர், பல்வேறு காரசாரமான கேள்விக்கு பதிலளித்தார்.

கம்பீர் - அகர்கர்
“திடீரென எல்லாம் வெறுமையாகி விட்டது..” - டி20 WC கடைசி 5 ஓவர்கள் குறித்து மனம்திறந்த ரோகித் சர்மா!

கம்பீர் உறுதிப்படுத்திய 7 முக்கிய பதில்கள்..

1. ஹர்திக்கிற்கு ஏன் கேப்டன்சி இல்லை?

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாகவும், அதற்கு முந்தைய டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சி பொறுப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் நிரந்தர டி20 கேப்டனாக பார்க்கப்படுகிறார்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாTwitter

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரின் பதிலாக, “ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வீரர், ஆனால் உடற்தகுதி என்பது அவருக்கு சவாலாகவே இருந்துவருகிறது. டி20 வடிவத்தை பொறுத்தவரையில் யாராவது எப்போதும் உடனிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீர் - அகர்கர்
’ரோகித், விராட் IN..ஹர்திக் இருந்தும் SKY கேப்டன்!’ இலங்கை தொடருக்கான இந்திய அணிகளை அறிவித்தது BCCI!

2. கோலி உடனான உறவு இதுதான்..

விராட் கோலி உடனான மோதல் குறித்தும், இருவருக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது என்பது குறித்தும் பேசியிருக்கும் கம்பீர், “எங்கள் இருவருக்குமான உறவு TRP-க்கானது அல்ல. விராட் கோலியுடன் நான் எப்படிப்பட்ட உறவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்றால், இது இரண்டு முதிர்ந்த நபர்களுக்கு இடையே இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்தந்த நேர களத்தில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஜெர்சிக்காக போராடி வெற்றிபெற்று டிரஸ்ஸிங் அறைக்கு திரும்புவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். நாங்களும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் எங்கள் அணிக்காக அதைத்தான் செய்தோம்.

ஆனால் இந்த நேரத்தில் நாங்கள் இருவரும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், 140 கோடி இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கப் போகிறோம், மேலும் இந்தியாவைப் பெருமைப்படுத்த முயற்சிப்போம் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்

கம்பீர் - அகர்கர்
“எங்கள் உறவு TRP-க்கானது அல்ல.. இந்தியாவை பெருமைப்படுத்துவோம்!” - விராட் கோலி குறித்து கம்பீர்

3. ஜடேஜா ஏன் அணியில் இல்லை?

jadeja
jadeja

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வுபெற்றுவிட்டதால் ஒடிஐ கிரிக்கெட்டிலிருந்தும் ஒதுக்கப்பார்க்கிறார்கள் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், “அக்சர் பட்டேல் மற்றும் ரவிந்திர ஜடேஜா இருவரையும் ஒன்றாக தேர்வு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எப்படியும் அதில் ஒருவர் பெஞ்ச் செய்யப்படுவார். ஜடேஜா டிராப் செய்யப்படவில்லை, அவருக்கு ஒரு நீண்ட டெஸ்ட் சீசன் வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீர் - அகர்கர்
மகளிர் ASIA CUP: 220 ஸ்டிரைக்ரேட்டில் ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்.. 201 ரன்கள் குவித்து IND சாதனை

4. ருதுராஜுக்கு ஏன் வாய்ப்பில்லை?

சமீபத்திய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா இருவரும் டிராப் செய்யப்பட்டது பல்வேறு விமர்சனங்களை பெற்றுந்தந்தது.

ருதுராஜ்
ருதுராஜ்pt web

இந்நிலையில் ருதுராஜ் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து, “வெளியேற்றப்பட்ட எந்த வீரரும் கடினமாகவே உணருவார்கள். நீங்கள் ரிங்கு சிங்கை எடுத்துக்கொள்ளுங்கள், டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர் சிறப்பாக செயல்பட்டார், ஆனாலும் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை. எங்களால் ஒரு அணிக்கு 15 பேரை மட்டுமே எடுக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீர் - அகர்கர்
“இந்தியா வரவில்லை என்றால் கிரிக்கெட் முடிந்துவிடாது; அவர்கள் இல்லாமல் விளையாடுவோம்” - PAK வீரர்

5. சூர்யகுமார் டி20-க்கு மட்டுமா?

டி20 அணிக்கான புதிய இந்திய கேப்டனாக சூர்யகுமார் யாதவை தேர்ந்தெடுத்தது குறித்து பேசிய அஜித் அகர்கர், அணியில் வீரர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

சூர்யகுமார் யாதவ், ஹர்திக்
சூர்யகுமார் யாதவ், ஹர்திக்pt web

சூர்யகுமாருக்கு டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டது குறித்து, “கேப்டனுக்கான தகுதியான வேட்பாளர்களில் ஒருவர் என்பதால் சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். எங்களுக்கு அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு நிரந்தர கேப்டன் வேண்டும். ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி மட்டுமே அவருக்கு சவாலாக உள்ளது, மற்றபடி அவர் குவாலிட்டியான வீரர்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சூர்யகுமார் யாதவை டி20 அணிக்கான வீரராக மட்டுமே பார்ப்பதாக தெரிவித்திருக்கும் அவர்கள், “நாங்கள் ஒரு நாள் போட்டிகளுக்கு சூர்யாவைப் பற்றி விவாதிக்கவில்லை, ஒருநாள் அணிக்கு ஸ்ரேயாஸ் திரும்பிவிட்டார், KL திரும்பிவிட்டார். இருவரும் சிறந்த உலகக் கோப்பைகளை பெற்றுள்ளனர். தற்போது ரிஷப் பண்ட்டும் திரும்பிவிட்டார், அதனால் இப்போதைக்கு சூர்யகுமார் யாதவ் T20I போட்டிகளில் மட்டுமே செயல்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீர் - அகர்கர்
’உங்களின் கடின உழைப்புக்கு கடவுளின் சரியான வெகுமதி’- டி20 கேப்டன் ஆனதற்கு SKY மனைவி நெகிழ்ச்சி பதிவு

6. கில்லுக்கு ஏன் அனைத்து வடிவத்திலும் இடம்?

சுப்மன் கில்லை மூன்று விதமான கிரிக்கெட்டின் எதிர்காலமாக பார்க்கும் கம்பீர் மற்றும் அகர்கர் இருவரும், அனுபவமில்லாத அவருக்கு துணைக்கேப்டன் பதவியை வழங்கியுள்ளனர்.

சுப்மன் கில்
சுப்மன் கில்ட்விட்டர்

அது விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், “கில் மூன்று வடிவத்திற்குமான வீரர், அவர் ஒழுக்கமான கேப்டன்சி தரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சூர்யகுமார் மற்றும் ரோகித் சர்மா இருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீர் - அகர்கர்
’நடிகையுடன் கிசுகிசு, BadBoy இமேஜ் இருந்தால் அணியில் இடமா?’ ருதுராஜ் நீக்கம் குறித்து பத்ரி ஆதங்கம்!

7. 2027 உலகக்கோப்பையில் கோலி மற்றும் ரோகித்?

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பேசியிருக்கும் கவுதம் கம்பீர், “ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது இரண்டு வடிவங்களில் மட்டுமே விளையாடுவார்கள் என்பதால், அதிகமான ஆட்டங்களில் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

ரோகித் - கோலி
ரோகித் - கோலி

அவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள், ஒருவேளை அவர்களின் உடல்தகுதி நன்றாக இருந்தால் 2027 உலகக்கோப்பை அவர்களுக்கு காத்திருக்கும். அதற்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் என நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கம்பீர் - அகர்கர்
தோனிக்கு மாற்றுவீரராக CSK-விற்கு செல்லும் பண்ட்? MI-ஐ விட்டு வெளியேறும் Rohit-SKY? வெளியான தகவல்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com