பாலாஜி, ஜாகிர் கான் இல்லை.. கம்பீரின் வலுவான ஆதரவோடு இந்திய அணிக்கான புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
பாலாஜி, ஜாகிர் கான், கம்பீர்
பாலாஜி, ஜாகிர் கான், கம்பீர்pt web
Published on

புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றபின் அணியில், மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றவாறே, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை உடனான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்எக்ஸ் தளம்

அதேசமயத்தில், அணியில் மற்ற பயிற்சியாளர்களாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இத்தகைய சூழலில்தான், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை, அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக கம்பீர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்பீரின் கோரிக்கைக்கு பிசிசிஐ இணங்கி இருப்பப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலாஜி, ஜாகிர் கான், கம்பீர்
#BREAKING |அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன் - கமலா ஹாரிஸை நிறுத்துவதற்கு ஆதரவு

கம்பீரின் ஆதரவில் மோர்னே மோர்கல்

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜி, வினய் குமார் மற்றும் ஜாகீர் கான் போன்றோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், மோர்னே மோர்கலுக்கு கம்பீரின் ஆதரவு வலுவாக இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் கொல்கத்தா அணிக்காக இணைந்து விளையாடியுள்ளனர்; லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோர்கல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளதால் சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் அவருக்கு இருக்கிறது.

இலங்கைத் தொடரிலேயே மோர்னே மோர்கல் அணியுடன் இணைவது சந்தேகமே. ஏனெனில், அவர் உடல்நலம் சரியில்லாது இருக்கும் தந்தையைப் பார்க்க தென்னாப்பிரிக்கா தலைநகரான பிரிட்டோரியாவிற்கு சென்று இருப்பதாகவும், இலங்கைத் தொடரில் இணைவது சந்தேகமே என்றும் தகவல்கள் வெளியானது.

பாலாஜி, ஜாகிர் கான், கம்பீர்
வரவு எட்டணா செலவு பத்தனா சூழலில் நிதியமைச்சர்.. பட்ஜெட் மேல் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி

இடைக்கால பயிற்சியாளர்

இந்நிலையில், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சாய்ராஜ் பஹூதுலேவை பிசிசிஐ நியமித்துள்ளது. இலங்கை ஆடுகளங்கள் சுழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால், சாய்ராஜ் பஹூதுலே தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தற்காலிகமானது என்பதும் இலங்கை உடனான தொடரில் மட்டுமே பந்துவீச்சு பயிற்சியாளராக இவர் செயல்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோர்னே மோர்கல் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலாஜி, ஜாகிர் கான், கம்பீர்
துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகள்.. சீனியர் vs ஜூனியர்.. திமுகவில் என்ன நடக்க வாய்ப்பு?

உதவி பயிற்சியாளர்கள்

இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்களாக, அபிஷேக் நாயர் மற்றும் பென் டோஸ்கேட் அணியில் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக, ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் பயிற்சியாளர்களாக இருந்தபோது, இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்கள் இல்லை என்பதும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு உதவி பயிற்சியாளர்கள் இருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பரபர தகவல்களுக்கு இடையில்தான், தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்திக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரும் கலந்து கொள்வார். இந்த செய்தியாளர் சந்திப்பு மும்பையில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

பாலாஜி, ஜாகிர் கான், கம்பீர்
“துணை முதல்வர் பதவி என்றால் யார் வேண்டாம் என்பார்கள்” - அமைச்சர் துரைமுருகன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com