கேரளா: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது மோசடி வழக்கு

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
sreesanth
sreesanthpt desk
Published on

ஸ்ரீசாந்த்தும் மேலும் இருவரும் தன்னிடம் 18 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக சரீஷ் பாலகோபாலன் என்பவர் கேரள காவல்துறையில் புகார் செய்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு கட்டங்களாக தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்பத்தரவில்லை என சரீஷ் பாலகோபாலன் தன் புகாரில் கூறியிருந்தார்.

Sreesanth
SreesanthPT Desk

தன்னிடம் இருந்து பெற்ற பணத்தைக் கொண்டு கர்நாடகாவில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை ஸ்ரீசாந்த் தொடங்கியதாகவும் சரீஷ் பாலகோபாலன் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த், ராஜிவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 420ஆவது பிரிவின் கீழ் கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

sreesanth
Credit Card செலவுகள் வரலாறு காணாத உயர்வு - முழு விவரம்!

இந்திய அணிக்காகவும் ஐபிஎல்லிலும் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த், சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வர்ணணையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com